வியாழன், 1 ஜனவரி, 2026

CINEMA TALKS - WAKE UP DEAD MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



Wake Up Dead Man (2025) என்பது Knives Out தொடரின் மூன்றாவது மர்மக் கதை. புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் பெனயிட் பிளாங்க் (Benoit Blanc) நியூயார்க் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமப்புறத்தில் நிகழும் அதிர்ச்சிகரமான கொலைக்கான விசாரணையை மேற்கொள்கிறார். 

கதையின் மையத்தில் ஜட் டுப்லென்டிசி என்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் இருக்கிறார். அவர் ஒரு போட்டியில் எதிராளியை தவறுதலாக கொன்ற பிறகு, மனச்சாட்சியால் பாதிக்கப்பட்டு, மதப்பணியில் போதகராக ஈடுபட்டு பங்குத்தந்தையாக மாறுகிறார். ஆனால், அவருடைய சர்ச் குரு போதகர் திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார்.

பிளாங்க் விசாரணையை தொடங்கியதும், போதகரின்வாழ்ந்த சமூகத்தில் பல அடுக்குகள் வெளிப்படுகின்றன. தந்தையின் அதிகாரத்தை வெறுத்த சிலர், அவரது ஜெயித்த காலத்தின் எதிரிகள், குடும்பத்தினர், மற்றும் பணக்கார ஆதரவாளர்கள், புத்தக எழுத்தாளர், யூ டியூப் செய்பவர், டாக்டர் என்று சம்பந்தமே இல்லாமல் இவரை பின்பற்றிய அனைவருக்கும் சமீபத்தில் நடந்த மோதலால் அவரை கொல்லும் காரணங்கள் இருந்தன. 

ஒவ்வொருவரும் தங்கள் இரகசியங்களை மறைத்து வாழ்ந்தனர்.  கடந்தகால குற்ற உணர்வு, சமூகத்தின் பாசாங்கு, மற்றும் மறைக்கப்பட்ட பாவங்கள் விசாரணையின் இறுதியில், குத்து சண்டை வீரரை நிரபராதி என்று நிரூபிக்க பிளாங்க் உண்மையான குற்றவாளியை வெளிப்படுத்துகிறார். 

ஆனால் அதற்கு முன், அவர் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான திருப்பம், முழு வழக்கையும் தலைகீழாக மாற்றுகிறது. கதை, மீட்பு, பாசாங்கு, மற்றும் இரகசியங்களின் அழிவு சக்தி போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது. ரியான் ஜான்சனின் பாணிக்கு இந்த படம் வேற லெவல் மேக்கிங் ! 


1 கருத்து:

கோகுல் தினகரன் சொன்னது…

உள்ளூர் பொருளாதார நிறுவனங்கள் சொல்வது போல நம்ம ஊருல தங்கம் வாங்குவது நிறுத்தினா என்ன நடக்கும்? பொதுமக்கள் சில நாட்கள் தங்கம் வாங்காமல் இருந்தாலே விலை குறையும் என்பது ஒரு பரவலான நம்பிக்கைதான், ஆனால் அது உண்மைக்கு அருகிலும் செல்லாது என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெளிவாகக் கூறுகிறார். தங்கத்தின் விலை இந்தியர்களின் தினசரி வாங்கும் பழக்கத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை; மாறாக, அது உலகளாவிய சந்தை இயக்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வட்டி விகிதங்கள், டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்முதல், பங்குச் சந்தை நிலவரம், புவியியல் அரசியல் பதற்றங்கள் போன்றவை தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கின்றன. இந்தியா உலகளவில் தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தாலும், நம் நாட்டில் சில நாட்கள் மக்கள் வாங்காமல் இருப்பது, அந்த விலையை குறைக்கும் அளவுக்கு தாக்கம் செய்யாது. மேலும், தங்கம் வாங்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் ஆழமாக பதிந்திருப்பதால், அதை ஒருசில நாட்கள் நிறுத்துவது ஒரு தீர்வாக இருக்க முடியாது. எனவே, தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடியது மிகக் குறைவு என்பதே உண்மை. தங்கம் நகைகளில் மட்டும் இல்லை , எலக்ட்ரானிக்ஸில் அதிகமாகபயன்படுத்தும் பொருள் மக்களே ! 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

SPECIAL TALKS - இந்த உலகமே கவனிக்க வேண்டிய பிரச்சனை !

  நம்ம வாழ்க்கையில் மொத்தமாக இந்த போதை விஷயங்களை அழிக்க வேண்டும்  மக்களே ! மதுபானத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளத...