திரவ நைட்ரஜன் என்பது மிகவும் குளிரான, நிறமற்ற திரவமாகும். இது சுமார் −196 °C (−321 °F) வெப்பத்தில் கொதிக்கும். இந்த அளவுக்கு குளிரான தன்மை காரணமாக, இது உலகில் மிகவும் பயனுள்ள க்ரையோஜெனிக் (அதிக குளிர்) பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண வெப்பத்தில் வைத்தால், அது உடனே ஆவியாகி விடும். திரவ நைட்ரஜன் பெரும்பாலும் திரவ காற்றை பிரித்து தயாரிக்கப்படுகிறது. காற்றில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நைட்ரஜன் திரவமாக மாற்றப்படுகிறது.
இதன் மிகுந்த குளிர் தன்மை காரணமாக, இது மருத்துவத்தில், உணவு பாதுகாப்பில், மற்றும் அறிவியல் ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மருத்துவத்தில் க்ரையோசர்ஜரி (CRYOSURGERY) என்ற முறையில், அசாதாரணமான திசுக்களை உறைய வைத்து அகற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், திரவ நைட்ரஜன் மிகவும் ஆபத்தானது. இது தோலில் பட்டால் கடுமையான FROSTBITE என்ற வகை பாதிப்பு ஏற்படும். மேலும், இது விரைவாக வாயுவாக மாறி, மூடிய இடங்களில் ஆக்சிஜனை குறைத்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.
அதனால், இதைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு கையுறைகள், முகக் கவசம், மற்றும் நல்ல காற்றோட்டம் அவசியம். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், திரவ நைட்ரஜன் அறிவியல், மருத்துவம், தொழில் துறைகளில் மிக முக்கியமான மற்றும் பல்துறை பயன்பாட்டைக் கொண்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக