புதன், 28 ஜனவரி, 2026

CINEMA TALKS - MELLINAME MELLINAME NENJIL MELLIYA KADHAL POOKUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

நான் தூர தொியும் வானம் 
நீ துப்பட்டாவில் இழுத்தாய் 
என் இருவத்தைந்து வயதை 
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் 

வீசிப்போன புயலில் 
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத 
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல 
என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது 
அது தரையில் விழுந்ததடி

மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக 
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக 

மண்ணைச்சேரும் முன்னே அடி 
மழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சோ்ந்த பின்னே 
தன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே 
என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே 
ன் உலகம் இயங்குதடி

வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதும் இல்லை

காதலி பேசவுமில்லை என் காதல் குறைவதும் இல்லை



கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...