இந்த காலத்து எழுத்தாளர்களுடைய வாழ்க்கை புத்தக அதுவே ஒரு பெரிய ஒரு காமெடி! ✍️ மனதை எழுத ஆரம்பிக்குற நேரத்திலேயே பிரச்சினை தொடங்கும். கதை எழுதணும் என்று மனசு கத்துற நேரத்தில, தூக்கம் வந்து கண் மூடிக்கிடக்கும். “ஊக்கம் வந்தா தூக்கம் போயிடணும், தூக்கம் வந்தா ஊக்கம் போயிடணும்”ன்னு ஒரு சாபம் மாதிரி! காபி குடிச்சா கதை வரணும், ஆனா காபி குடிச்சதும் கதை வராம, காபி ரிவ்யூ மட்டும் எழுத ஆரம்பிப்பார். WRITERS BLOCK போல ரொம்ப வித்தியாசமான பிரச்சனை என்று இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது அடுத்த சிரமம் — பக்கங்கள் vs பாக்கெட். புத்தகத்துக்கு பக்கங்கள் எழுதுறதுக்கே சிரமம், ஆனா பாக்கெட்டில் பணம் இல்லாம, “இந்த பக்கங்கள் விற்குமா?”ன்னு கவலை. குடும்பத்தில யாராவது “சாப்பாடு சாப்பிடலையா?”ன்னு கேட்டா, எழுத்தாளர் “அந்த ஹீரோ இன்னும் சாப்பிடல, அவனோட பசி தான் முக்கியம்!”ன்னு சொல்லி, குடும்பத்தையே கதையோட யோசித்துப் பார்த்து மனதுக்குள் குழப்பம் அடைந்து.கடைசியில் டெலிவரி பண்ண வேண்டிய கதையை ஒரு வழி பண்ணிடுவார். முடிவில், எழுத்தாளர்களோட பிரச்சினைன்னா, கதை எழுதுறதுக்கே ஒரு கதை! படிப்பவர் ரசிப்பார்களா என்று யோசிப்பார், ஆனா வீட்டில “குறைந்த பட்ச சம்பளத்தில் பிழைப்பவர்” சம்பளம் எங்கேன்னு கேட்பார். 😅 எழுத்தாளரின் வாழ்க்கை கவனிக்கப்பட்டால் அதுவே ஒரு சிறந்த நாவல் தான் சிரிப்பு, சிரமம், சின்ன சின்ன பழிவாங்கும் படலம், பெரிய பெரிய கனவு எல்லாம் கலந்த ஒரு “மிக்ஸி” என்றே ஒரு பரிதாபகரமான கப்பல் கவிழ்ந்து போனது போன்ற ஒரு விமர்சனத்தை குடுக்கலாம் ! புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் போல அது அவ்வளவுதான், டைம் முடிஞ்சிடுச்சு. இனி சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக