திங்கள், 19 ஜனவரி, 2026

GENERAL TALKS - கணினிகளே உலகத்தின் எதிர்காலம் !




வாழ்க்கையில் நாம் எவ்வளவு முன்னேற்றத்தை கொண்டு வந்தாலும், சக்தியாளர்களின் தாக்கத்தால் அந்த முன்னேற்றம் பல நேரங்களில் பின்னடைவாக மாறிவிடுகிறது. அதனால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் கவனமாகவும் சரியாகவும் முடிவு செய்ய வேண்டும்.

முன்னதாகவே தேவையான விஷயங்களை பரிசோதித்து, சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் விலைவாசி உயர்ந்து கொண்டிருப்பதால், பணத்தை சேகரிப்பது மிகவும் கடினமாகியுள்ளது.

சுமாராக 25 லட்சம் போதுமானது என்று நினைத்தாலும், இந்த காலத்தில் எல்லாம் பெரிதாக தொழில் செய்ய இறங்கினால் கோடிகள் அளவுக்கு பணம் தேவைப்படுகிறது.

வரவு செலவுகளை மூன்று சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நிதி மேலாண்மையின் அடிப்படை. மேலும், அதிக சக்தி தேவையில்லாத, ஆனால் பல்வேறு பயன்பாடுகளுக்குத் தகுந்த லோ லெவல் சிஸ்டம்ஸ் மற்றும் மீடியம் ரேஞ்ச் சிஸ்டம்ஸ் நமக்கு தேவைப்படுகிறது.

இவை பொழுதுபோக்குகளுக்காக மட்டுமல்ல, தொழில்முறை வேலைகளுக்கும் அவசியம். ஒரு காலத்தில் AutoCAD, Maya, Dreamweaver, Blender போன்ற சாப்ட்வேர்களில் திறன்களை வளர்க்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது;

ஆனால் அந்த திட்டம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் வாங்குவது, தொழில்முறை போட்டோகிராபி செய்வது, இணைய வசதிகளை உருவாக்குவது, டிரான்ஸ்போர்ட் செய்வது அனைத்தும் மிகப்பெரிய சவால்களாக மாறியுள்ளன.

கம்ப்யூட்டர் டெக்னாலஜி இந்த உலகத்தில் AI என்ற இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது, நம்மால் எதுவுமே பண்ண முடியவில்லை மக்களே, அதுதான் வருத்தமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...