செவ்வாய், 20 ஜனவரி, 2026

GENERAL TALKS - நிறைய குழப்பமாக இருக்கிறது மக்களே !!




முதலில், இந்த கருத்துக்கள் யாரையும் சார்ந்தவை அல்ல; அவை என் சொந்த வாழ்க்கையிலிருந்து உருவானவை. யாருடைய வாழ்க்கையில் இவை பிரதிபலித்தாலும், அதற்கான பொறுப்பு எனக்கு இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தை முழுமையாக மாற்றியிருக்கிறது. ஒரு காலத்தில் 10–12 KB வேகத்தில் மட்டுமே டவுன்லோட் ஸ்பீடு இருந்தது; 

அப்போது அது சிறப்பாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று, இணைய வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியால் 95% மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் அவர்களை அதிகமாக பாதிக்கிறது. இதை மறுக்க முடியாது, ஏனெனில் பின்னணியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சதி எப்போதும் உள்ளது.

இரண்டாவது, மனிதர்களின் வளர்ச்சி சக்தியாளருக்கு ஆபத்தாக இருப்பதால், அவர்களை வளர விடாமல் தடுத்து விடுகிறார். அதனால், யாரும் நிரந்தரமாக வெற்றி அடைந்துவிட்டார்கள் என்றும், நிரந்தரமாக தோல்வியடைந்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. 

இது மனித மூளையின் மேஜிக். மனிதன் எப்போதும் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். உயிரோடு இருக்கும் மனிதன் இத்தகைய விஷயங்களால் மனமடைந்து போகக் கூடாது. சந்தோஷங்கள் வரும்போது, உலகத்தின் அறிவுகளை அதற்காக பயன்படுத்தக் கூடாது; வாழ்க்கையை நினைவில் வைக்க வேண்டும். 

மூளை மற்றவர்களை எப்படி புரிந்து கொள்கிறது, தகவல்களை எப்படி சேகரிக்கிறது என்பதையே வெற்றியின் அடிப்படை என்று கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வெற்றிகள் சிலருக்கு சிறப்பாக தோன்றலாம், சிலருக்கு இல்லாமல் தோன்றலாம்; ஆனால் அவை வாழ்க்கையில் நிலையான நிலையை ஏற்படுத்தும்.

மூன்றாவது, முட்டாள்கள் கடைசி வரை முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பார்கள்; ஆனால் சரியான நேரம் கிடைத்தால் அவர்கள் புத்திசாலிகளாக மாறலாம். புத்திசாலிகள் பொதுநலமாக யோசிக்காமல், சுயநலமாக மட்டுமே யோசிப்பார்கள். 

எவ்வளவு ஸ்மார்ட்டானவராக இருந்தாலும், அவர்கள் கூட தவறான முடிவுகளை எடுக்க முடியும். எக்னாமிக்ஸில் வெறும் பேச்சு போதாது; ஒரு செயல், ஒரு பொருள் அல்லது ஒரு தகவல் கிடைத்தாக வேண்டும். 

அந்த தகவல்களை மதிப்புடன் பணமாக மாற்ற வேண்டும். ஒரு மனிதன் இரண்டு வருடங்களில் மாறுவான் என்றால், 20 வருடங்கள் கொடுத்தாலும் மாற மாட்டான். மனிதன் தனது உள்ளத்தில் தொடக்கத்தில் இருந்தபடி கடைசி வரை இருப்பான். 

அறிவியலால் கூட அவனுடைய அடிப்படை மனதை மாற்ற முடியாது. தற்காலிகமாக ஒரு உணர்வை ஏற்படுத்தி, அதை நிரந்தரமாக வாழ்க்கையில் பின்பற்றச் செய்யலாம்; ஆனால் அடிப்படையான மனதில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...