செவ்வாய், 20 ஜனவரி, 2026

CLEAR TALKZ - EPISODE 1




வாழ்க்கையில் வெற்றி பெற போதுமான வளங்கள், குறிப்பாக பணமும் ஆதரவும், எப்போதுமே கிடைக்காத அளவுக்கு சக்தியாளர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். 

இந்த அநியாயங்களை எதிர்த்து போராடாமல் விட்டால், அவர் இன்னும் பல அநியாயங்களை நிறைவேற்றுவார். அதனால் தான், வலிகளும் வேதனைகளும் அதிகமாக இருந்தாலும், நான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். 

நாளைக்கே நான் இறந்து போக வேண்டியிருந்தாலும், சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வேன்; ஏனெனில், வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேதனையை விட ஒரு நாள் அமைதியாக முடிவை அடைவது எனக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும். 

இருந்தாலும், என் மனம் தொடர்ந்து நினைவூட்டுகிறது  நான் எதற்காக போராட வேண்டும், என்னுடைய முடிவு என்ன என்பதை. அதனால் தான், உடைந்து சிதறினாலும், மறுபடியும் ஒன்றாக சேர்ந்து, உடைக்க முடியாத இயந்திரமாக மாறி, என்னை எதிர்க்கும் அனைத்தையும் வெற்றி அடைய முயற்சிக்கிறேன்.

இந்த போராட்டத்தில் யாரையாவது நம்பலாம் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது. ஆனால் யாரை நம்ப முடியும்? பிரபஞ்சத்தின் சக்தியாளர் அனைத்தையும் மாற்றும் சக்தி கொண்டவர். 

எனவே, தனி மனிதனாக நின்று மட்டுமே இந்த போராட்டத்தை வெல்ல முடியும். மற்றவர்களுடன் சேர்ந்து வெற்றி பெறுவது சாத்தியமற்ற காரியமாக மாறிவிட்டது. அதனால், தனிமையில் போராடுவது என் அடையாளமாகி விட்டது.

ஒரு கருத்து என்னவென்றால் நாம் நம்முடைய உள்ளுணர்வுக்கு சரியாகவும், அறிவியல் அடிப்படையில் துல்லியமாகவும் ஒரு வேலையை செய்தால், அந்த வேலையில் 100% வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 

உள்ளுணர்வுக்கு சரியான மனநிலையில் ஈடுபடும்போது, சலிப்பு இல்லாமல் முன்னேற்றம் கிடைக்கும்; அதுவே அன்லிமிடெட் சக்தியை தருகிறது. அறிவியல் அடிப்படையில் துல்லியமாக செயல்பட்டால், வெற்றி நிச்சயம். தவறாக செயல்பட்டால், பதினைந்து சதவீதம் வரை சேதாரமாக முடியும். 

நான் எப்போதுமே கடினமான விஷயங்களைச் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறேன்; அதனால் தான் முன்னேற்றம் சாத்தியமாகிறது. குறைந்து கொண்டிருக்கும் நேரத்துக்கு எதிராக, நான் வேகமாக போராடிக் கொண்டிருக்கிறேன். 

இது நரக வேதனை போல இருந்தாலும், வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல், தரையில் விழாமல், நேருக்கு நேராக கோபத்தோடு போராடிக் கொண்டிருப்பதே என் அடையாளம் என்று நான் நம்புகிறேன் ! 

கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...