புதன், 31 டிசம்பர், 2025

MUSIC TALKS - THITHI THIDAVE ORU MURAI MUTHAM KODUPAYA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

 



தித்திடவே தித்திடவே

ஒரு முறை முத்தம் கொடுப்பாயா?

கொடுப்பாயா ? கொடுப்பாயா?


பத்திக்கிடவே பத்திக்கிடவே

பல முறை இன்பம் எடுப்பாயா?

காட்டும் பொழுதே பதிப்பாயா?


நீ வார்த்தை பேசிட இனிப்பாயா?

கேட்கும் பொழுதே பறிப்பாயா?

நீ போர்வை கூசிட அணைப்பாயா?

அணைப்பாயா அணைப்பாயா?


தித்திடவே தித்திடவே?

ஒரு முறை முத்தம் கொடுப்பாயா?




தலை கோதி உன் தலை கோதி

நான் முழுதாக கலைகிறேன்

இமை மோதி உன் இமை மோதி

நான் படு காயம் அடைகிறேன்


ஏ வசிய மருந்தாய் வசிய மருந்தாய்

விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே?


இதழின் இதழால் இளைபோடு

நீ இரவு முழுதும் இறை தேடு

மனதை மனதால் அணைப்போடு

என் புடவை நெருப்பில் விளையாடு

விளையாடு விளையாடு


தித்திடவே தித்திடவே?

ஒரு முறை முத்தம் கொடுப்பாயா?


கொதிப்பாகி உன் உடலாலே

நான் குடை சாய நேர்ந்தது

ஒரு பாதி உன் உயிராலே

நான் குளிர் காய சேர்ந்தது


ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே

முத்த தீயில் வாத மேனியனே?


இரும்பு மார்பில் வாசித்தேனே

நான் கரும்பு வேர்வை ருசித்தேனே

ஆசை வெட்கம் வார்பேனே

உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே

பூப்பேனே பூப்பேனே


தித்திடவே தித்திடவே

ஒரு முறை முத்தம் கொடுப்பாயா?

கொடுப்பாயா கொடுப்பாயா?


பத்திக்கிடவே பத்திக்கிடவே

பல முறை இன்பம் எடுப்பாயா?

காட்டும் பொழுதே பதிப்பாயா?


நீ வார்த்தை பேசிட இனிப்பாயா?

கேட்கும் பொழுதே பறிப்பாயா?

நீ போர்வை கூசிட அணைப்பாயா?

அணைப்பாயா அணைப்பாயா?




கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - THITHI THIDAVE ORU MURAI MUTHAM KODUPAYA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

  தித்திடவே தித்திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா? கொடுப்பாயா ? கொடுப்பாயா? பத்திக்கிடவே பத்திக்கிடவே பல முறை இன்பம் எடுப்பாயா? காட்டும் பொழ...