புதன், 21 ஜனவரி, 2026

இணையதள கருத்துக்கள் ! EP.1




ஒரு மனிதராக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் தனிப்பட்டதாக மட்டுமல்ல, பொருளாதாரத்துடனும் ஆழமாக இணைந்துள்ளது. நிகர பொருளாதாரம் சரிவு அடையும்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாதிப்புகளை பார்க்க முடிகிறது. 

நாம் அந்த தருணங்களை சரியாக பயன்படுத்தினால், நம்முடைய பொருளாதார நிலையை உயர்த்த முடியும். பணம் என்பது எக்கனாமிக்ஸின் முக்கியமான "கையிருப்பு காகித ஸ்டாக்" ஆகும்; அதை கவனமாக சேமித்து, பாதுகாத்து, உரிமையுடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் கணக்குகளும் வைத்திருக்க வேண்டும் !

அறிவியல், தொழில்நுட்பம், இயற்பியல், உயிரியல், கணினி போன்ற துறைகள் அனைத்தும் முக்கியமானவை என்றாலும், ஒரு கட்டத்தில் சராசரி மனிதருடைய எக்கனாமிக்ஸ் பற்றிய புரிதல் அவற்றை விட மேலானதாக மாறுகிறது. 

ஏனெனில் மற்ற துறைகளில் தோல்வியடைந்தால் எதுவும் கிடைக்காது, ஆனால் பொருளாதாரத்தில் தோல்வியடைந்தாலும் அடிப்படை அறிவை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இதுவே வாழ்க்கையின் கடைசி கட்ட சப்போர்ட் பணம் நமக்காகவே வேலை செய்யும் நிலை.

இன்றைய உலகில் தொழில்நுட்பம் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை கையில்கொண்டவர்கள், சமூகத்தின் பலரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். 

சில பணக்காரர்கள் ஏழை மக்களை அடிமைப்படுத்தும் நிலை உருவாகிறது. பேராசை என்பது அடித்தளம் இல்லாத கார்டு போர்டு பெட்டி போன்றது; எவ்வளவு சேர்த்தாலும் அது தரையில் விழுந்துவிடும். 

இதற்கு சிறந்த உதாரணம், மரங்களை மற்றும் விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகளாக மாற்றும் கலாச்சாரம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நாமே, அதற்கு எதிராக செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். 

நமக்காக உணவு உற்பத்தி செய்யும் நிலங்கள் குறைந்து, தொழிற்சாலைகள் மட்டுமே வளர்கின்றன. இதனால் வெற்றி என்ற பெயரில் உலகம் சீர்கெடுகிறது. சூழ்நிலை வெப்பம் பருவ மழையை பாதித்து உணவு விளைச்சல் குறைவதால் சமையல் பொருட்கள் விலை அதிகமாகிறது !! 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இன்னும் கொஞ்சம் சொந்த அனுபவங்கள் !

வணிகம் என்பது முதலைகளுக்கான இடம் போல. ஒரு ஏரியை கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதலை மட்டுமே அந்த ஏரியில் சந்தோஷமாக வ...