வியாழன், 1 ஜனவரி, 2026

MUSIC TALKS - MUTHU NAGAIYE MUZHU NILAVE - KUTHU VIZHAKKE KODI MALARE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே 
கொடி மலரே

முத்து நகையே 
முழு நிலவே 
குத்து விளக்கே
கொடி மலரே

கண் இரண்டும் மயங்கிட 
கன்னி மயில் உறங்கிட 
நான் தான் பாட்டெடுப்பேன் 
உன்னை தாய் போல் 
காத்திருப்பேன்

முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே 
கொடி மலரே

இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதைதான் 
உந்தன் தேசம்
வளர் பிறை தான்

முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே
கொடி மலரே

உன்ன பாத்து
ஆச பட்டேன் 
அத பாட்டில்
சொல்லி புட்டேன் 
நீயும் தொட 
நானும் தொட 
நாணம் அது 
கூச்சமிட 
அட்டை போல்
ஒட்டி இருப்பேன்

இந்த காதல்
பொல்லாதது 
ஒரு காவல்
இல்லாதது 
ஊத காத்து
வஞ்சி மாது 
ஒத்தையில
வரும் போது 
போர்வை போல 
பொத்தி அணைப்பேன்

ஆறு ஏழு நாளாச்சி
விழி மூடி 
அடி ஆத்தாடி
அம்மாடி 
உன்னை தேடி

நீதானே 
மானே
என் இளஞ்ஜோடி 
உன்னை
நீங்காது என்றும் 
என் உயிர் நாடி

நித்தம் தவித்தேன்
நீ வரும் வரைக்கும்

முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே 
கொடி மலரே
முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே 
கொடி மலரே

புள்ளி மானு
பெண்ணானதா 
கெண்ட மீனு 
ண்ணானதா 
பூ முடிச்சி 
பொட்டு வச்சி
புன்னகையில் 
தேன் தெளிச்சு 
பக்கம் ஒரு
சொர்க்கம் வருதா

அட வாயா 
கைய தொடு 
பள்ளி பாடம் 
கத்து கொடு 
ஆவணியில் 
பூப்படைஞ்சு 
தாவணிய போட்டுகிட்ட 
சின்ன பொண்ணு 
ஆசை விடுதா

ஆவாரம் பூவாக
விடுவேனா 
ஒரு அச்சாரம்
வெக்காம 
இருப்பேனா

தேனாறும் 
பாலாறும்
கலந்தாச்சி 
அன்பு நாளாக
நாளாக 
வளர்ந்தாச்சு

என்ன படச்சான்
நீ 
துணை வரத்தான்

முத்து நகையே
முழு நிலவே 
குத்து விளக்கே 
கொடி மலரே

கண் இரண்டும்
மயங்கிட 
கன்னி மயில்
உறங்கிட 
நான் தான்
பாட்டெடுப்பேன் 
உன்னை
தாய் போல் 
காத்திருப்பேன்

முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே 
கொடி மலரே



கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - இந்த உலகமே கவனிக்க வேண்டிய பிரச்சனை !

  நம்ம வாழ்க்கையில் மொத்தமாக இந்த போதை விஷயங்களை அழிக்க வேண்டும்  மக்களே ! மதுபானத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளத...