செவ்வாய், 20 ஜனவரி, 2026

CLEAR TALKZ - EPISODE 7

 


பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் முன்னேற முடியாது. 

பணமும் பணம் சார்ந்த சமுதாயம் மட்டுமே உருவாக்கியுள்ளது. இந்த விஷயங்களில் எப்போதும் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு சரியான கேப்பிட்டல் சிஸ்டம் என்பது, அனைவரின் உடல் நலம் மற்றும் மனநலம் சரியான ஆரோக்கியத்தில் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் மட்டுமே முழுமையாக இயங்க முடியும்.

கம்யூனிசம் என்பது வெற்றியடையக்கூடிய அமைப்பாக தோன்றவில்லை. இருந்தாலும், கம்யூனிசத்தில் ஒரு விதமான இணைப்ப தன்மை உள்ளது எல்லா விஷயங்களும் மாயாஜாலமாக நடந்துவிடும் என்ற நோக்கம். 

ஆனால் கேப்டலிசம்தான் தற்காலிகமாக எளிய வழிமுறையாக இருப்பதால், பிரிவினைகளை பயன்படுத்தக் கூடியவர்கள் அதை சரியாக பயன்படுத்தி மேலே சென்று வெற்றி அடைகிறார்கள். அதே சமயம், பிரிவினையில் இன்னொரு கட்டம் தினமும் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு சின்ன அளவிலான கெட்ட விஷயத்தை செய்வது ஒரு நொடிக்குள் நடக்கலாம்; பெரிய அளவிலான கெட்ட விஷயத்தை செய்வது ஒரு நாளுக்குள் நடக்கலாம். ஆனால் நல்ல விஷயங்களைச் செய்ய எப்போதும் அதிகமான நேரம் தேவைப்படும். 

ஒரு சின்ன நல்ல விஷயத்திற்கே ஒரு வாரம் தேவைப்படலாம்; பெரிய நல்ல விஷயத்தைச் செய்ய மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைப்படலாம். இதற்கான காரணம், நம்முடைய சுற்றுப்புறச் சூழ்நிலைகள் பெரும்பாலும் கெட்ட விஷயங்களின் மூலமாக சம்பாதிப்பை உருவாக்குவதற்கு ஆதரவு அளிக்கின்றன. 

நல்ல விஷயங்களின் மூலமாக சம்பாதிப்பை உருவாக்குவது மிகவும் கடினம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு, “நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை” என்ற முறையை அமைத்தால் என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம். 

உதாரணமாக, திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு வேலை நாட்களாகவும், நடுவில் மூன்று நாட்கள் விடுமுறையாகவும் இருந்தால் அது நன்றாக இருக்கும். ஆனால் இது எல்லாமே கற்பனை சார்ந்த விஷயங்கள். நிஜத்தில் இது எந்த அளவுக்கு சரியாக அமையும் என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே தெரியும்

கருத்துகள் இல்லை:

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...