ஒரு போராட்டத்தை நாம் தொடங்குகிறோம் பிறப்பு, வாழ்க்கை, மரணம் என்று நம்முடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தாலும், அதே மாதிரியான ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்வதற்கு எப்பொழுதும் ஆசைப்படுவதில்லை.
நமக்கான போராட்டத்தை நாம் தோற்றுதான் போகிறோம், ஏனெனில் நம்முடைய நிலைமை எப்பொழுது வேண்டுமானாலும் தாறுமாறாக மாறக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கும்போது நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு நிலையான போராட்டம் தேவை.
வாழ்க்கைக்கான அமைதியை நாம் ஒரு குறிப்பிட்ட அளவு விலை கொடுக்காமல் எதிர்கொள்ள முடியாது. இது ஒரு கண்டெண்ட் இல்லாத யூ ட்யூப் சேனலைப் போல வாழ்க்கை வெறுமையாக இருக்க முடியாது.
காசு இருந்தால்தான் அனைத்து விஷயங்களிலும் வெற்றி அடைய முடியும். வருங்காலத்தை பார்க்கும்போது விவசாயத்திலும் போதுமான வருமானம் இல்லாமல் அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே அடிப்படையில் மனித தன்மை குறைந்து கொண்டே வருகிறது; மனிதன் இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்கு சென்று கொண்டிருக்கிறான்.
இந்த வகையில் மனிதன் தன்னுடைய சுற்றுச்சூழலுக்கு அவனே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறான். அவனுடைய பேராசையை காரணம் காட்டி சுற்றுச்சூழலை இன்னும் அதிகமாக எடுத்துக் கொண்டே இருக்கிறான்.
“எனக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும்” என்பதைக் காட்டிலும் “மற்றவர்களுக்கு சாப்பாடு கிடைக்கக்கூடாது” என்ற மனப்பாங்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது. பொதுவாக ஒரு சராசரியான மனிதனின் வாழ்க்கையில் 50% பிரச்சனைகள் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நன்மைக்காக பணம் சம்பாதிக்கும் போது தான் உருவாகின்றன.
மனிதன் இதை உணராமல், “இது தான் என் விதி” என்று முடிவெடுத்து விடுகிறான். வாழ்க்கை ஒரு சோப்பு பவுடர் விளம்பரம் போல உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பும் சூழ்நிலை உருவாகிறது.
தனக்கான வாக்குறுதிகளை கொடுத்து முன்னேற்றத்திற்கான செயல்களைச் செய்தாலும், சக்தியாளர் அதைத் தடுப்பதற்கு தயாராக இருக்கிறான். வாழ்க்கை தேவையில்லாத இடங்களில் அதிகமான எஃபெக்ட் கொடுக்க வேண்டிய ஒரு கண்டெண்ட் இல்லாத சேனல் போல இருக்க முடியாது.
இந்த உலகம் கற்றுக்கொடுக்கும் விஷயம் “இதுதான் உங்கள் ஏரியா” என்று தெரிவிக்கப்பட்டால், அந்த ஏரியாவில் கவனமாக இருக்க வேண்டும். டாஸ்க் கொடுக்கப்பட்டால், அதைத் தவிர்க்காமல் முடிக்க வேண்டும்.
எவ்வளவு வேகமாக அந்த டாஸ்க் முடிக்கிறோமோ, அப்போதுதான் வெற்றி கிடைக்கிறது. இந்த உலகத்தில் 100% கெட்ட விஷயம் வேலைக்காகாது; அதேபோல் 100% நல்ல விஷயமும் வேலைக்காகாது. ஆனால் இரண்டும் சேர்ந்து 100% வேலைக்கான விஷயங்களாக மாறுகிறது.
வாழ்க்கையில் ஒரு பேலன்ஸ் ஷாட் மனப்பாங்கில் இருங்கள். உங்கள் மனப்பாங்கை பயன்படுத்தி அட்ஜஸ்ட் செய்து வாழுங்கள். தொழில்நுட்பத்தில் 1997 ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய அப்கிரேட் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மனிதன் இரண்டு மடங்கு ஸ்மார்டாக மாறிக்கொண்டே இருக்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக