ஒரு கிராமத்தில் எப்போதும் பசியால் வாடிய ஒரு ஏழை மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு இரவு, அவன் கனவில் ஒளிரும் சந்நியாசி தோன்றினார். சந்நியாசியின் கையில் கொஞ்சம் பொற்காசுகள் பிரகாசித்தன. அவர் கனவில் சொன்னார்: “நாளை நான் உன்னிடம் வருவேன். என்னை அடித்தால், உனக்கு செல்வம் கிடைக்கும்.” அந்த ஏழை மனிதன் விழித்ததும், இதுவே தனது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு என்று நம்பி, நாள் முழுவதும் ஆவலுடன் காத்திருந்தான்.
மாலை நேரத்தில், சந்நியாசி உண்மையிலேயே கிராமத்தில் தோன்றினார். கனவை நினைவுபடுத்திக் கொண்ட ஏழை மனிதன், மெதுவாக ஒரு குச்சியால் சந்நியாசியை அடித்தான். உடனே, சந்நியாசியின் ஆடையிலிருந்து பத்து பொற்காசுகள் விழுந்தன.
பசியால் தவித்த அவன் உடனடியாக அவற்றை எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள சந்தையில் விற்றான். அந்தக் காசுகள் அவனுக்கு போதுமான உணவையும், சிறிய வீடும், அமைதியான வாழ்க்கையையும் கொடுத்தன. இருந்தாலும் அந்த பொற்காசுகளை கொடுத்தபோது கற்றுகொண்ட பாடம் ஒன்றை நினைவுகூர்ந்தான்,
சந்நியாசியை தாக்கும்போது பார்த்துக்கொண்டு இருந்த நண்பரிடம் "நான் இந்த விஷயத்தை பற்றி இன்னொரு நாள் விளக்கம் கொடுக்கிறேன் என்று 3 பொற்காசுகளை நண்பருக்கு பரிசாக கொடுத்து நடந்ததை யாரிடமும் சொல்லாதே என்று சொன்னான். இந்த நண்பர் பிரச்சனைக்கு பின்னால் வருவோம்.
சந்நியாசி, கருணையுடன் சிரித்தபடி, “இந்த செல்வத்தால் இப்போது உன் பசி தீரும்; உன் வாழ்க்கை வளமாகும். நினைவில் கொள் செல்வம் பகிர்ந்தால் மட்டுமே நிலைக்கும்,” என்ற ஆசீர்வாதத்தை கொடுத்து வார்த்தைகளால் ஆசீர்வதித்தார். அந்த வார்த்தைகளுடன் அவர் மாயமாக மறைந்து விட்டார். ஏழை மனிதன் அந்த ஆசீர்வாதத்தை மனதில் கொண்டு, பொற்காசுகளால் கிடைத்த செல்வத்தை நன்றியுடன் பயன்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ்ந்தான்
நண்பரோ இந்த சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு பேராசையை வளர்த்துக்கொண்டு அடுத்த வாரம் சில சந்நியாசிகளை விருந்து என்று சொல்லி அழைத்து வீட்டை உள்பக்கமாக தாள் போட்டு ஒரு பெரிய குச்சியை எடுத்தது தாறு மாறாக அடிக்க ஆரம்பித்தான். அரசரின் பாதுகாப்பு படை காவலர்கள் சத்தம் கேட்டு சந்நியாசிகளை காப்பாற்றி நண்பரை சிறையில் சில வருடங்களுக்கு அடைத்து வைத்தனர்.
அந்த நண்பர் பொறாமைப்பட்டார் , தன்னுடைய நண்பருக்கு கிடைத்த செல்வத்தை அபகரிக்க முடியாமல் போனதை நினைத்தார், இந்த பொறாமை இன்று அவருடைய வாழ்க்கையை அழித்துவிட்டது. நண்பர்கள் முன்னேறினால் பொறாமை வேண்டாம் மக்களே, அதுவும் உதவி பண்ணிய நண்பர்களை கண்டிப்பாக நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக