புதன், 21 ஜனவரி, 2026

இணையதள கருத்துக்கள் ! EP.2




இன்றைய தேதிக்கு உலகம் சந்திக்கும் இந்த விலைவாசி உயர்வு சவால்கள் மனித மூளைக்கும் உலகின் சூழ்நிலைக்கும் நேரடியாக ஒரு போராட்டமாக உள்ளது. 

சுவை நிறைந்த சத்துமானம் இல்லாத உணவுகள் குறைந்த அறிவுத்திறன் மற்றும் உடல் வலிமை இருக்கும் சமூகம் உருவாக நேரடி காரணம் என்பதை யாருமே புரிந்துகொள்ளவில்லை மக்களே !

 அதிகமான பொருளாதார அழுத்தம் சமூக பண புழக்கத்தில் வெற்றிடத்தை உருவாக்க இவர்கள் பொருட்களை தயார் செய்யாமல் பணத்துக்காக கிரிபட்டோ கரன்சி போன்ற புதிய வடிவங்கள் உருவாகினாலும் மக்களுடைய பசியை வேதனையை இயலாமையை இப்போது அறியாமையின் எல்லா கட்டுப்பாடுகளையும் கடந்து செல்லாமல் வெற்றி பெற முடியாது. 

இதனால் மக்களிடையே எதிர்ப்பு உருவாகுவது தவிர்க்க முடியாத ஒன்று. உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை தீர்க்க கடினமான நிர்வாகம் தேவைப்படுகிறது. நடைமுறை சவால்கள் அதிகமாக இருந்தாலும், இதுவே இன்றைய காலத்தின் மிக அவசியமான தேவை. 

இன்றைய உலகில் தொழில்நுட்பம் ஒரு மறைமுகப் போராக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை கையில்கொண்டவர்கள் மட்டுமே இந்த போரில் மூளைகளாக செயல்படுகிறார்கள். 

அவர்கள் சமூகத்தில் உள்ள மக்களை மயக்கும் விற்பனை பொருட்கள் கலாச்சாரம் கொண்டுவந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். நேரடியாகச் சொல்லப்போனால், 

சில பணக்காரர்கள் மொத்த ஏழை மக்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இது பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது. 

ஒரு காகித விமானத்தை பறக்க விடுவது போல வாழ்க்கை எளிதாக இல்லை. உண்மையான கஷ்டத்தை அனுபவிக்கும் மனிதனுக்கே வாழ்க்கையின் பாரம் தெரியும். போதுமான பணம் இல்லாதவர்களின் வாழ்க்கை நரகத்துக்கு சமம்.

“பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல” என்று மனதை ஏமாற்றிக் கொள்ள முயற்சித்தாலும், உண்மையில் பணத்தை தவிர்த்து வேறு எதுவும் வாழ்க்கை இல்லை. மனநிறைவு என்பது, நாம் ஆசைப்படும் வாழ்க்கையை நேரடியாக வாழ்ந்தால் மட்டுமே கிடைக்கும். 

அது அதிர்ஷ்டத்தின் மூலமாக கிடைக்கலாம்; உழைப்பால் கிடைக்கும் என்று நம்பினாலும், எப்போதும் சரியாக இருக்காது. இருந்தாலும் போராடிக் கொண்டே இருந்தால், அதிர்ஷ்ட முறையிலாவது மனநிறைவு கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மோடு இருக்கும். இந்த மனநிறைவை அடைய, சுயநலமான போராட்டம் தொடர வேண்டும்

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - எப்போதும் அறிவியல் சரியான தேர்வு !

  வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலி ராமன் நகருக்குத் திரும்பியபோது ஊரெங்கும் பரபரப்பாக இருந்தது. வடநாட்டு வியாபாரி ஒருவர், “என் பொருளின...