ஒரு ஒரு நிமிடமும் கரைந்து போகும் அளவுக்கு கடிகாரம் முன்னோக்கி நகர்கிறது, தினசரி காலண்டரின் தேதிகள் கிழிக்கப்படுகின்றன கடந்த காலம் போய்விட்டது என்பதை மனதில் உறுதியாக பதிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தை அறிவின் மூலம் கையிலெடுத்து, கடந்த காலத்தை சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாம் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். மற்ற துறைகளில் கவனம் செலுத்தினாலும், மனிதனின் திறன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே போதுமான அளவுக்கே மற்ற துறைகளில் ஜெயிக்க முடியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில்தான் மனிதன் சிறப்பாக ஜெயிக்க முடியும் எல்லைகள் இல்லாமல் ஜெயிக்க முடியும்.
எல்லைகளோடு ஜெயிப்பது வருங்காலத்தில் தோல்வியைத்தான் கொடுக்கும், நமக்கு தேவை அறிவா ? அறியாமையா ? என்று கேள்வி கேட்டால் அறிவைத் தேர்ந்தெடுத்து துன்பங்களை சமாளிக்கும் மனிதர்களுக்கு போதுமான இன்டெலிஜென்ஸ் கிடைக்கிறது; அதன்மூலம் பணத்தையும் உருவாக்க முடிகிறது. இதனால், பிரச்சனைகளுக்கு அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை யோசிக்காமல் செயல்படுத்த வேண்டும்.
றிவியல் எப்போதுமே மாறாதது; அது மனிதனுக்கு தூய்மையான நன்மையை மட்டுமே தருகிறது. உதாரணமாக, ஒரு குழந்தைக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால், அந்த குழந்தையின் உடல்நிலை, வசதி, தேவைகளைப் புரிந்து கொண்டு மருத்துவ ஏற்பாடுகளைச் செய்வது அறிவியல். ஆனால் இந்த பிரிவினை தூண்டும் குடும்ப சென்டிமெண்ட் பார்க்கும் சமூகம் பெரும்பாலும் அந்தக் குழந்தையின் குடும்பம், மதம், சாதி, வேலை, சமூக நிலை போன்றவற்றை கேள்வி கேட்கிறது. மருத்துவ உதவியில் பாரபட்சம் பார்க்கிறது இதுவே அறிவியல் மற்றும் பிற கருத்துக்களின் வித்தியாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக