இன்றைய உலகம் மிக வேகமாக நகர்கிறது. ஒரு வேலையைச் செய்ய நமக்கு மொத்தமாக ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) கொடுக்கப்பட்டால், அதை 40 நிமிடங்களில் முடித்து, மீதமுள்ள 20 நிமிடங்களை வீணாக்காமல் அடுத்த கட்ட வேலையைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு தனிப்பட்ட வேகத்தை அதிகரித்தால்தான் இந்தக் காலத்தில் வெற்றி பெற முடியும். காலம் பொன்னுக்கு சமம்; அதை இழந்துவிட்டால் மீண்டும் பெற முடியாது.
காலத்தை இழந்த வருத்தம், மரத்தை மெதுவாக அழிக்கும் கரையான் போல, மனதை சிதைத்து விடும். நம்பிக்கையை ஒரு கவலையின் வெள்ளம் நீரோட்ட வேகத்தில் வீடுகளை சேதப்படுத்தி சமவெளியாக மாற்றுவது போல நமது கனவுகள் காலத்தை இழந்துவிட்டால் வாழ்க்கை வெறுமையாகி விடும்.
பொறுப்பு இல்லாமல் இருந்தால் இந்த விதி என்பது நாம் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய விஷயங்களை இழந்தததை காரணம் காட்டி தடுக்கவோ, சக்தி இருந்தும் மறுக்கவோ, போராடியும் பெற முடியாமல் போனாலோ நம்மை கஷ்டப்படுத்த இந்த வழிகளை பயன்படுத்துகிறது கடைசியில் குழப்பத்தில் தவிப்பது நாமாகத்தான் இருக்கும்.
பொறுப்பு இல்லாமல் இருந்தால் வாழ்க்கை கடலுக்குள் கலக்கும் சுத்தமான தண்ணீர் போல வீணாகி விடும்; அது உப்பு நீராக மாறுவது போல, நம் கவனத்தையும் கட்டுப்பாட்டையும் மீறி வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் மாறுபாடு இல்லாமல் நல்ல உணவு, நிம்மதியான தூக்கம், தங்குவதற்கு இடம், உடைகள், ஆதரவான குடும்பம், நண்பர்கள், வாகனம், வங்கி கணக்கு, பணம், சுகாதாரமான சூழ்நிலை இது போன்ற விஷயங்களுக்கே ஆசைப்படுகிறோம் ஆனால் இவை அனைத்தையும் நிறைவேற்றுவது எளிதான காரியம் அல்ல !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக