இன்றைய வேகமான காலகட்டத்தில், மனிதர்களுக்குப் பொறுமை என்பது மிகக் குறைவாக உள்ளது. ஒரு நிமிடம் ஓடும் 'Reels' மற்றும் 'Shorts' வீடியோக்களுக்குப் பழகிப்போன மூளைக்கு, இரண்டரை மணி நேரம் பொறுமையாகக் கதையமைப்பைப் புரிந்து படம் பார்ப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால், இயக்குநர்கள் கதையை நம்புவதை விட, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சி, அதிரடி பின்னணி இசை, அல்லது கண்ணைக் கவரும் வண்ணமயமான பாடல்கள் என 'டொபாமின்' (Dopamine) என்ற மகிழ்ச்சியூட்டும் ஹார்மோனைத் தூண்டும் காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
இது பார்ப்பவருக்குத் தற்காலிகமாக ஒரு போதை போன்ற உற்சாகத்தைத் தருகிறதே தவிர, படம் முடிந்து வெளியே வந்தபின் மனதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. கதையை கொண்டுள்ள படங்களை பெரிய பட்ஜெட்டில் உருவாக்க முடிவது இல்லை
அப்படி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினாலும் வணிக ரீதியாக செலவான தொகையை வரவாக எடுக்க முடிவது இல்லை , இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவந்தே ஆகவேண்டும் !
இது கதைசொல்லலில் இருக்கும் ஒரு புரிதலை விட்டுவிட்டு ஒருவகை முட்டாள்தனத்தை கொடுப்பதாகவே கருதப்படுகிறது, தங்கப்பதக்கத்தை கொடுத்து ஒரு இன்ஸ்டாகிராம் ரீலஸ் போன்ற விஷயத்தை பாராட்டுகிறார்கள்
முன்னணி நட்சத்திரங்கள் கூட இப்போது எல்லாம் கமர்ஷியல் கதைகளில் இதுபோல டொபாமைன் கதைகளை நம்புவது இன்னும் வருத்தமானது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக