திங்கள், 1 ஜூன், 2026

LIFE TALKS - ஒரு மாற்றத்தை உதயமாக்க வேண்டும் !

 


கடந்த காலத்தையே யோசித்தால் மனது ஒரு நிரந்தரமான குழப்பத்தை அடைந்துவிடும் , வாழ்க்கையில் மாற்றம் என்பது ஒருபோதும் பொதுவெளியில் நடப்பதில்லை. உங்கள் சிந்தனையை மாற்றுவது, பழைய பழக்கங்களை விடுவது போன்ற பரிணாம வளர்ச்சியின் கடினமான பகுதிகள் அனைத்தும் யாரும் பார்க்காத போது, யாரும் உதவாத போதுதான் தனிமையில் நடக்கின்றன.

நாம் உலகிற்கு காட்டிக் கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல; நாம் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள், சுமந்து திரியும் ஏமாற்றங்கள் மற்றும் வெற்று அறைகளில் நாம் விட்டுச் சென்ற நமது பழைய பதிப்புகளின் தொகுப்புதான் நாம். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் தன் கடந்த கால சுவடுகளின் சுடுகாட்டைச் சுமந்து கொண்டிருக்கிறான். நமக்கு அருகில் அமர்ந்திருக்கும் நபர், ஒரு மிக நீண்ட, சிக்கலான புத்தகத்தின் தற்போதைய அத்தியாயம் மட்டுமே.

ஆனால் அடுத்த அத்தியாயத்தை படிக்காமல் போகவும் காலம் நம்மை சிக்கவைத்தாலும் சிக்கவைத்துவிடும், கடந்த காலம் பற்றி நினைத்து நினைத்தே வருடக்கணக்கில் குழப்பத்தில் இருந்தவர்களை பார்த்து இருக்கிறோம் அல்லவா ? இது நடக்கும் விஷயம்தான். இந்த குழப்பத்தை சரிசெய்ய வேண்டும் ! 


கருத்துகள் இல்லை:

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...