திங்கள், 1 ஜூன், 2026

CINEMA TALKS - நமது சினிமா பற்றி கொஞ்சமாக பேசலாமே ? #10

 


'10 வினாடி' ரீல்ஸ் (Reels) கட்-காகவே எடுக்கப்படும் காட்சிகள்!
இப்போதெல்லாம் பல இயக்குநர்கள் தியேட்டரில் உட்காரும் ரசிகனுக்காக படம் எடுப்பதே இல்லை; இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் ஷார்ட்ஸிலும் ரீல்ஸ் போடும் 2K கிட்ஸுக்காகத்தான் படம் எடுக்கிறார்கள். கதை இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன என்றெல்லாம் படம் வருகிறது 

ஒரு சீன் திடீரென ஸ்லோ-மோஷனில் நகரும், பின்னால் பிஜிஎம் அலறும், ஹீரோ ஒரு பஞ்ச் லைன் பேசுவார். அந்த சீனுக்கும் கதையின் ஓட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. அது ஏதாவது அரசியல் ரெஃபரென்ஸ் என்று இருக்கும், கதைக்கே சம்பந்தம் இருக்காது , LIK படத்தில் சூரியன் என்ற வில்லனின் பெயர் , GEN Z புரட்சி இது எல்லாம் அரசியல் ரெஃபரென்ஸ் தான் 

புரிதல் இல்லாத மின்னல் வேக மொபைல் வாசிகளுக்கு "இன்ஸ்டா-ல ரீல்ஸ் போடுறதுக்கு மெட்டீரியல் வேணுமே பாஸ்!" என்பார்கள். ரீல்ஸில் 15 வினாடி பார்ப்பதற்கு அது மாஸாக இருக்கும், ஆனால் தியேட்டரில் 3 மணி நேரம் முழுப் படமாகப் பார்க்கும்போது அது வெறும் குப்பை! ஆனால் சினிமா பழைய ஜெனெரேஷனுக்கு குறைந்தது 300 பேராவது உழைத்ததால் உருவான அடையாளம் அந்த படம் , சின்ன பட்ஜெட் என்று இருந்தாலும் சரியாக இருக்கும் !






கருத்துகள் இல்லை:

LIFE TALKS - நமது ஆழ்மன சிந்தனைகளின் சக்தி ! #3

  நவீன மருத்துவம் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை (psychosomatic illness) விரிவாகப் ஆவணப்படுத்தியிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்ட...