திங்கள், 1 ஜூன், 2026

CINEMA TALKS - நமது சினிமா பற்றி கொஞ்சமாக பேசலாமே ? #7

 


விமர்சனம் பண்ணுபவர்கள் இலாபத்துக்காக கவர் கலாச்சாரம் பொட்டி கலாச்சாரம் , மக்களை கவர இப்போதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி ஃபர்ஸ்ட் ஷோ முடிகிறதோ இல்லையோ, தியேட்டர் வாசலில் மைக் பிடித்துக் கொண்டு நூறு யூடியூப் சேனல்கள் நின்றுவிடுகின்றன.

இந்த சேனல்கள் மொத்த கதையையும் முதல் நாளில் கொட்டி ரசிகர்களை அவர்களுடைய எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறார்கள், உதாரனத்துக்கு மிஷன் - சாப்டர் 1 என்று ஒரு படம் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்தது, 

இந்த படத்துடைய ஒருவரி கதையை தெரியாமல் பார்த்தால்தான் சுவாரஸ்யம் , ஆனால் விமர்சனம் பண்ணுகிறேன் என்று கிளைமாக்ஸ் வரை கொத்து பரோட்டா போட்டு கதையை வெளியே சொல்லி இவர்கள் இந்த படம் என்பதை விட அவர்கள் சேனல் பெரிது என்று காட்டுகிற விஷயம் தப்பு ! 

படத்தை ரசித்துச் சொல்வதை விட, யார் மொக்கையாகக் கலாய்க்கிறார்கள், யார் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்பதுதான் ட்ரெண்ட். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகனை விட, தியேட்டர் வாசலில் மைக் பிடிப்பவர்களின் "பெர்ஃபாமன்ஸ்" அதிகமாக இருக்கிறது.

ஒரு சாதாரண ரசிகன் தியேட்டருக்குள் போய் படம் பார்த்துவிட்டு அவனாக ஒரு முடிவுக்கு வருவதற்குள், சோசியல் மீடியாவில் "இது மொக்கை படம், காசு வேஸ்ட்" என்று நெகட்டிவிட்டியைப் பரப்பி, ஒரு நல்ல முயற்சியை ஆரம்பத்திலேயே குழிதோண்டிப் புதைத்துவிடுகிறார்கள்.

ஒரு காலத்தில் கமர்சியல் படங்களில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் இருக்கும். ஆனால் இப்போது, "படம் எடுத்தால் சமூகத்திற்கு ஒரு கருத்து சொல்லியே தீர வேண்டும்" என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

அதை பற்றி அடுத்த போஸ்ட் பாருங்கம் மக்களே ! கருத்து சொல்லும் ஆட்களுடைய மனநிலை , கருத்து கேட்கும் ஆட்களின் மனநிலை , ரொம்ப சிக்கலானது ! 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - நமது ஆழ்மன சிந்தனைகளின் சக்தி ! #3

  நவீன மருத்துவம் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை (psychosomatic illness) விரிவாகப் ஆவணப்படுத்தியிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்ட...