வாழ்க்கை நம்மை பலவந்தமாக மாற்றுவதில்லை; அது தன் தொடர் அழுத்தத்தால் நம்மைச் செதுக்குகிறது. பாறையைக் குடையும் நதியைப் போல, காலம் மெதுவாக நமது மாயைகளைக் கரைத்து, இறுதியில் முகமூடியற்ற நமது உண்மையான சுயத்தை மட்டுமே மிச்சப்படுத்துகிறது.
ஒரே ஒரு சோகத்தால் நாம் ஒரே இரவில் மாறிவிடுவதில்லை. மாறாக, எதார்த்தத்தின் தினசரி, அமைதியான உராய்வுதான் நம்மை நாமாக மாற்றியமைக்கிறது
எல்லாமே எளிதாகக் கிடைத்துவிட்டால் அங்கே சுவாரஸ்யமும் இருக்காது, எதற்கும் மதிப்பும் இருக்காது. சுட்டெரிக்கும் வெயிலில் மைல்கள் கடந்து நடப்பவனுக்குத்தான் ஒரு சொட்டுத் தண்ணீரின் அருமையும், மரத்தின் நிழலும் சொர்க்கமாகக் காட்சியளிக்கும்.
கஷ்டங்கள் மனிதனை உடைப்பதில்லை, மாறாக அவனுக்குள் இருக்கும் உண்மையான மனிதனை வெளியே கொண்டு வருகின்றன. இதனைத்தான் வாழ்க்கை நமக்கு கடினமான காலங்களில் புரிய வைக்கிறது
சுலபமான வாழ்க்கை நம்மை மேலோட்டமாக வாழ வைக்கும். ஆனால், சோதனைகள் வரும்போதுதான் நாம் எங்கே நிற்கிறோம், நம்முடைய பலம் என்ன என்பது நமக்கே புரியும். கடினமான போர்களை சந்திக்கவில்லை என்றால் பேரரசருக்கும் இங்கே மரியாதை இருப்பது இல்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக