எப்போதுமே கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்பி அடம்பிடிக்கும் ஒரு மனிதரிடம் வாதாடுவதையும், கத்துவதையும் விட, ஒரு நல்ல மனிதன் செய்யும் மிக நுணுக்கமான விஷயம் "விலகிச் செல்வது" மற்றும் "மௌனமாக இருப்பது".
மனித மனதின் மறுபக்கத்தையும், காயங்கள் ஒருவனை எப்படிப் பக்குவப்படுத்துகின்றன என்பதையும் மக்கள் குறைவாக மதிப்பிடுகிறார்கள், கடந்த காலத்தை விட்டுவிடுங்கள் மக்கேளே !
கடந்த கால நினைவுகள் என்பது நமது மனம் செய்யும் ஒரு அழகான ஏமாற்று வேலை. அது கடந்த காலத்தின் தூசிகளை வடிகட்டி, பொன்னான தருணங்களை மட்டும் பளபளப்பாக்கி, இப்போது இல்லாத ஒரு காலத்திற்கும் இடத்திற்கும் நம்மை ஏங்க வைக்கிறது
நல்லதோ கெட்டதோ கடந்த காலத்தை மட்டும் நினைத்து நினைத்து பார்த்துக்கொண்டு நிகழ்கால வாழ்க்கை என்பதை கோட்டை விடுவது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை !
நாம் கடந்த காலத்திற்காக ஏங்குவதில்லை; நமது நினைவாற்றல் எடிட் செய்து வைத்துள்ள ஒரு சரியான பதிப்பிற்காகவே ஏங்குகிறோம். அது ஒரு பழைய வீட்டை ஒரு அழகான வண்ண வடிகட்டி வழியாகப் பார்ப்பது போன்றது.
சந்தோஷமோ சோகமோ கடந்த காலத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்க வேண்டாம், ஒரு விதை வளரும் போது, அது முழுமையான இருளிலும் முற்றுமுழுதான மௌனத்திலும் தான் வளர்கிறது. வளர்ச்சி என்பது பூமிக்கு அடியில் நடக்கும் ஒரு தனிமையான பயணம்; அந்த மரம் இறுதியாக நிலத்தை உடைத்துக் கொண்டு வெளியே வரும்போதுதான் இந்த உலகம் கைதட்டுகிறது
கடந்த காலத்தை பின்பற்றும் ஆட்கள் அவ்வளவாக மாறாமல் ஃபிக்ஸ்ட் மைண்ட் செட்டில் இருப்பார்கள் , கிரோவ்த் மனநிலைக்கு நீங்கள் வரவேண்டும் என்றால் உங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக