இன்னொரு பக்கம் திரையரங்கிற்கு மக்கள் வருவது ரிலாக்ஸ் செய்ய, என்டர்டெயின் ஆக. ஆனால், இடைவேளைக்கு அப்புறம் ஹீரோ திடீரென்று விவசாயம், கார்ப்பரேட் அரசியல், கல்வி முறை என்று கையில் மைக்கை பிடித்துக்கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்துவிடுகிறார் என்று ஒரு கம்ப்லேயன்டு , மெசேஜ் வேண்டும் என்று சொல்கிறார்கள் , ஆனால் மெசேஜ் சொல்லக்கூடாது என்றும் சொல்கிறார்கள் என்று இயக்குனர் வட்டாரமே குழம்புகிறது
ஆனால் அதை அளவுக்கு அதிகமாக 'பிரசங்கம்' (Preaching) செய்யாமல், கதையோடு கலந்து சொல்லத் தவறிவிடுகிறார்கள். காசு கொடுத்துவிட்டு தியேட்டரில் போய் உட்கார்ந்தால், ஏதோ தார்மீகக் கல்வி வகுப்பில் உட்கார்ந்திருப்பது போல் ஃபீல் ஆகிறது என்று GEN Z சொல்கிறார்கள்
GEN Z ஒரு குழப்பமான ஆட்கள் , வேலை , திருமணம் என்று எதிலுமே நிரந்தரம் இருக்காது , ஒரு சுவாரஸ்யம் அவர்களுக்கு இருக்க வேண்டும் , ஆனால் கதைகளில் சுவாரஸ்யம் வேண்டும் என்றால் ஒரு சில நிதானமான கதையை கொண்டு சேர்க்க முடியாது உதாரணத்துக்கு அந்த 96 படத்தை போல என்று சொல்லலாம்
ஹீரோ ஒரு அடி அடித்தால் பத்து பேர் பறப்பது பழைய மாடல். இப்போது ஹீரோ சும்மா முறைத்துப் பார்த்தாலே கார் வெடிக்கிறது, ஹெலிகாப்டர் கீழே விழுகிறது. அதுதான் ஸ்டைல், வில்லன் என்ட்ரி கடைசி 1 மணி நேரத்தில் நடக்கிறது, வில்லன் வேலையை பார்க்க சம்பந்தம் இல்லாமல் ஒரு கிளாமர் பாடலில் யாரோ ஒரு பெண்மணி டான்ஸ் ஆட இடமே கொடூரமாக இறுக்கும் !
மாஸ்" என்ற பெயரில் கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகளை வைக்கும்போது, அது திரையில் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஸ்டண்ட் எடுக்கிறேன் என்று சொல்லி, கார்ட்டூன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்கள்
ஒரு படத்தில் சுடும்போடு புல்லட்டுகளை இரண்டு ஜப்பான் வாள் கொண்டு ஹீரோ தடுக்கிறார் , எல்லாம் ஓகே ஆனால் அவர் குடும்பம் என்று வந்தபோது கோட்டை விட்டதால்தான் இன்டர்வேல் காட்சியோடு ஹீரோயினுக்கு போட்டோ போட்டு மாலையை மாடிவிட்டார்களே ? முடியல்லப்பா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக