திங்கள், 1 ஜூன், 2026

CINEMA TALKS - நமது சினிமா பற்றி கொஞ்சமாக பேசலாமே ? #12

 


மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தங்களை ஏதோ 'ஐந்து நட்சத்திர ஹோட்டல்' ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு கட்டணங்களை எக்கச்சக்கமாக உயர்த்தியிருக்கிறார்கள். இவ்வளவு காசு கொடுத்துவிட்டு உள்ளே போய் உட்கார்ந்தால், அங்கே திரைக்கதையில் ‘அதிமேதவித்தனம்’ என்ற பெயரில் மொக்கை போடும்போது ரசிகனுக்கு வரும் கோபம் இருக்கிறதே வீவரிக்க முடியாதது 

டீ-ஏஜிங்' (De-aging) மற்றும் AI தொழில்நுட்ப அலப்பறைகள்!
தொழில்நுட்பம் வளர்வது நல்லதுதான். ஆனால், அதை நம்ம ஊரில் பயன்படுத்தும் லட்சணம் அலாதியானது. 

நம்மை விட்டு பிறந்த எல்லோரையும் அந்த காலத்தில் மதித்த 60 வயது ஹீரோவை 25 வயது இளைஞனாகக் காட்டுகிறேன் என்று 'டீ-ஏஜிங்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த காலத்தின் முகத்தில் இருக்கும் எக்ஸ்பிரஷனையே மொத்தமாகத் துடைத்து விடுகிறார்கள். 

ஸ்கிரீனில் பார்ப்பதற்கு மனிதர் மாதிரியே இருக்காது, ஏதோ வீடியோ கேம் கேரக்டர் ஆடுவது போல் இருக்கும். இது அவருடைய இழப்பு ஒரு பரோமோஷன போல பயன்படுத்துவது , OUT வந்ததும் யாருமே பார்க்க மாட்டார்களா ? கேள்வி கேட்க மாட்டார்களா ?

கண் பேசும், முகம் பேசும் என்று சொல்வார்களே... சிக்ஸ் பாக் உடம்பு , ஜீன்ல வந்த அழகு என்று அதையெல்லாம் கிராபிக்ஸ் செய்து பிளாஸ்டிக் பொம்மை ஆக்கிவிடுகிறார்கள். அப்புறம் எப்படி ரசிகனுக்கு அந்த கேரக்டர் மீது ஒரு எமோஷனல் அட்டாச்மென்ட் வரும்? என்பதும் குறை சொல்பவர்கள் கேட்கும் கேள்வி ! 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - நமது ஆழ்மன சிந்தனைகளின் சக்தி ! #3

  நவீன மருத்துவம் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை (psychosomatic illness) விரிவாகப் ஆவணப்படுத்தியிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்ட...