திரைக்கதையில் (Screenplay) புதுமை செய்கிறேன் என்று 'நான்-லீனியர்' (Non-linear), 'மல்டி-லேயர்' (Multi-layered), 'சைக்கலாஜிக்கல் த்ரில்லர்' என தேவையில்லாத குழப்பங்களைச் சேர்த்து விடுகிறார்கள். தேவை இல்லாதது என்பதுக்காக மலிவான விஷயம் என்று அர்த்தம் அல்ல, மக்கள் வாங்க மாட்டார்கள் என்பதில்தான் சிக்கலே நடக்கிறது
கதை என்னவோ சாதாரண பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஆனால், அதற்குள் தேவையில்லாத குறியீடுகளையும் (Symbols), தத்துவங்களையும் திணித்து, பார்ப்பவர்களை "தலைவலி மாத்திரை" தேட வைத்துவிடுவார்கள், போதாமல் மார்கெட்டிங் - என்ற வகையில் டிரெய்லர் டீகோடு செய்து பாதி கதையை வெளியே சொல்ல வேண்டியிருப்பது கவலையான விஷயமாகும்
ஓரு படம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அதில் ரசிகனை உருகவைக்கும் அல்லது சிலிர்க்க வைக்கும் 'உணர்ச்சி' (Emotion/Connect) இல்லை என்றால் அது தோல்வியே. அதுக்காக இந்த உணர்ச்சியை கொட்ட வேண்டும் என்று முக்கியமான கேரக்டர்களை கதையில் காலி பண்ணினால் படம் வந்தது தெரியாமல் மறைந்துவிடும்
OTT-யால் திரையரங்குகளுக்குப் பாதி ஆபத்து என்றால், இயக்குநர்களின் இந்த "அதிமேதவித்தனமான" (Over-intellectual) திரைக்கதைதான் மீதிப் பாதியையும் முடித்து வைத்துவிடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக