இப்போதெல்லாம் மல்டி-ஸ்டாரர் (Multi-starrer) படங்கள் எடுப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு பெரிய நடிகரைத் தூக்கி உள்ளே போடுகிறார்கள். உச்ச நடிகரின் முகமாவது வரவேண்டும் , ஃபோன் பேசும் அளவுக்காவது வாய்ஸ் கேமியோ வேண்டும் என்று சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள்
அந்த நடிகர்களுக்குக் கதையில் உருப்படியாக ஏதேனும் வேலை இருக்கிறதா என்றால், சுட்டுப் போட்டாலும் இருக்காது. வெறும் 'போஸ்டர்' போடுவதற்கும், அந்தந்த மாநில பிசினஸை பிடிப்பதற்கும் மட்டும்தான் அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். உள்ளூர் நடிகர் என்றால் ரசிகர்களை குஷிப்படுத்த ஒரு மோசமான அடடே ! ஆச்சரியக்குறிதான் இந்த கேமியோ மோசடி
மலையாள சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரை கூட்டிவந்து, நம்ம ஊர் படத்தில் ஹீரோவுக்குப் பின்னால் சும்மா கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க வைக்கும் கொடுமையெல்லாம் இங்கேதான் நடக்கும் , இரண்டாம் தர மூன்றாம் தர சப் ஸ்டாண்டர்ட் கதாப்பாத்திரத்துக்கு அவர்கள் எதுக்கு ?
இன்றைய சினிமா 'கண்டென்ட்'டை (Content) நம்புவதை விட, 'கால்குலேஷன்'களை (Calculation) மட்டும்தான் நம்புகிறது. இந்த நடிகரைப் போட்டால் இவ்வளவு பிசினஸ், இந்த மியூசிக் டைரக்டரைப் போட்டால் ரீல்ஸ் ஓடும், இந்த லொகேஷன் காட்டி விளம்பரம் செய்யலாம் என்கிற வியாபாரக் கணக்கு இருக்கிறதே தவிர... "மக்களுக்கு ஒரு நல்ல கதையைச் சொல்ல வேண்டும்" என்கிற நேர்மை பல இடங்களில் மிஸ் ஆகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக