இப்போதெல்லாம் படம் எடுப்பதற்கு 6 மாதங்கள் உழைக்கிறார்கள் என்றால், அதை விளம்பரம் செய்ய 8 மாதங்கள் யோசிக்கிறார்கள். ஹைப் (Hype) ஏற்றியே கொல்வது: ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ், டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், லிரிக்கல் வீடியோ, அப்புறம் "டிரெய்லர் ரீ-எடிட் வீடியோ" என ரிலீஸ்க்கு முன்பே படத்தின் முக்கால்வாசி கன்டென்ட்டைக் காட்டிவிடுகிறார்கள். திரையரங்கில் ஏமாற்றம்: தியேட்டருக்குள் போனால், அந்த ட்ரெய்லரில் பார்த்த 3 சீனைத் தவிர படத்தில் ஒன்றுமே இருக்காது. "எதிர்பார்ப்பைக் கிளப்புவது தவறு இல்லை,
ஆனால் ஏமாற்றத்தைக் கொடுப்பதுதான் பாவம். இந்த கங்குவா , AK ஒரு ரெட் டிராகன், அமீர் கான் கிளைமாக்ஸ்ல வாராரு , இது எல்லாம் என்னவென்று சொல்ல ? ஒரு சில நேரங்களில் நம்ம ஊர் மண்ணின் கதையை, நம்ம ஊர் எமோஷனைச் சொல்லாமல், வட இந்திய ரசிகனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் ஒரு 'ஹிந்தி' வில்லனைப் போடுவது, அல்லது சம்பந்தமே இல்லாத வட இந்திய லொகேஷன்களுக்குக் கதையை நகர்த்துவது எனப் படத்தின் ஆன்மாவையே கொன்றுவிடுகிறார்கள். மதுரை, திருநெல்வேலி, சென்னை என நம்ம ஊர் சுவர்களைக் காட்டி ஜெயித்த தமிழ் சினிமா, இன்று எதற்கோ ஆசைப்பட்டு தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
ரைக்கதையில் எந்த ஒரு சுவாரசியமும் இருக்காது. ஆனால், பின்னணி இசையை (BGM) அலறவிட்டு, தியேட்டர் ஸ்பீக்கர்களைக் கிழிய வைத்து, பார்ப்பவர்களை "ஆஹா, என்ன மாஸ் சீன்!" என்று நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். 30 நாளில் ஜப்பான் மொழியை கண்டேய்னரில் கற்றுக்கொண்டு ஜப்பான் வில்லன்களிடம் டயலாக் விடுகிறார் நம்ம ஹீரோ ஆனால் பெரிய பள்ளிக்கூடமே போனது இல்லை என்று காட்டுகிறார்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக