திங்கள், 1 ஜூன், 2026

CINEMA TALKS - நமது சினிமா பற்றி கொஞ்சமாக பேசலாமே ? #11

 


திறமையாகப் புதுக் கதைகளை யோசிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, இப்போது இருக்கும் ஒரே சுலபமான வழி: ரசிகர்களின் பழைய நினைவுகளை விற்பது என்றுதான் இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம் என்கிறார்கள் ஒரு தரப்பு 

வார வாரம் புதுப் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, 10 வருடம், 20 வருடத்திற்கு முன்பு வந்த பழைய சூப்பர்ஹிட் படங்கள் 4K-ல் ரீ-ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கின்றன. புதுப் படங்களுக்குக் கூட்டம் வருகிறதோ இல்லையோ, பழைய படங்களுக்கு தியேட்டர்கள் திருவிழா மாதிரி களைகட்டுகின்றன.

5.1 சவுண்டு எஃபக்ட்டில் பழைய ஆடியோ பிரித்து சவுண்ட் இன்ஜினியரிங் பண்ணப்பட்டு பாடல்கள் BASS கூட்டப்பட்டு மறுபடியும் பார்க்க வைக்க நினைப்பது மக்கள் ஆர்வம் குறைவதை காட்டுகிறது 

இங்கே விமர்சனம் செய்யும் ஆட்கள் புதுப் பட இயக்குநர்கள் உருப்படியாகப் படம் எடுக்காததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த பழைய காலத்திற்கே (Nostalgia) தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். சினிமாக்காரர்களும் புதுமையாக எதையும் யோசிக்காமல், "அதான் பழைய படத்தையே தியேட்டர்ல போய் பாக்குறாங்களே, நாம ஏன் கஷ்டப்பட்டு கதை எழுதணும்?" என்று ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள்.

50 ரூபாய் டிக்கெட் எடுத்து உள்ளே போனால், ஒரு பாப்கார்னும் வாட்டர்பாட்டிலும் வாங்க 500 ரூபாய் செலவழிக்க வேண்டும் , அதுவும் தீபாவளி பொங்கலுக்கு பார்த்த டிவியில் பலமுறை பார்த்த பழைய படம்  நன்றாக இருக்கிறதோ இல்லையோ, தியேட்டருக்குள் நுழைவதே இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்குப் பெரும் செலவுமிக்க விஷயமாக இருக்கிறது 


கருத்துகள் இல்லை:

LIFE TALKS - நமது ஆழ்மன சிந்தனைகளின் சக்தி ! #3

  நவீன மருத்துவம் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை (psychosomatic illness) விரிவாகப் ஆவணப்படுத்தியிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்ட...