வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

SPECIAL TALKS - கனவுகளுக்கான பதிவு - DREAM NOTES !




நான் இந்த பதிவில் என்னுடைய கனவுகளில் நடந்த சம்பவங்களை பற்றியும் நான் என்னவெல்லாம் கனவுகளை கண்டேன் என்பது பற்றியும் புரிந்தும் புரியாமலும் இருக்கும் விஷயங்களை பதிவிடுகிறேன். இந்த கனவை பற்றி சொல்லப்போனால் இந்த கனவில் நான் ஒரு பிலிம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தொட்டி ஜெயா படத்தின் நெக்ஸ்ட் பாகம் போல இருக்கிறது. சம்மந்தப்பட்ட ஜெயாவின் கதாப்பத்திரத்தின் நண்பன் நண்பனே இல்லையாம், அவரை போலவே உருவமும் முக அமைப்பும் இருக்கக்கூடிய ஒரு இன்னொரு ஆளாம், இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் கேங் வார் சண்டைக்கு ஒரு பிளாக் ஆம்னி மாதிரியான வண்டியில் செல்லும்போது இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இவருக்கு சாக பயம் இல்லை. பேசிக்காக இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கும் லெவல்லில் ஜெயா இல்லை. ஒரு பக்கம் உயரமான ஒரு மேடு ஒன்றில் யாருக்குமே தெருவில் இருந்தும் சத்தம் போடாமல் எறிக்கொண்டு இருக்கிறார்கள். சம்பவம் நடக்கிறது. நான் மோஸ்ட்டாக இப்போது பழைய தமிழ் கேங்ஸ்ட்டர் படங்களை பார்ப்பதால் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறது போல! இன்னொரு கனவில் ஒரு குறிப்பிட்ட சங்கேத என்னை கொடுத்தால் ஒரு பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்படும் என்று ஒரு கட்டம் இருக்கும்போது வரிசையாக கெஸ் பண்ணிய எண்களில் சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல் ஒரு சைண்டிஸ்ட் ஒரு எண்ணை கொடுக்கிறார், கம்ப்யூட்டரில் என்டர் பண்ணியதும் நடக்கும் அசம்பாவிதம் தடுக்கப்படுகிறது. என்னுடைய கனவுகள் எல்லாம் சினிமா ஸீன்களாகவே வந்துகொண்டு இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - வாழ்க்கை முன்னேற்ற கருத்துக்கள் #2

இந்த வலைப்பூவில் நான் விரிவான விஷயங்களை கற்றுக்கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் மக்களையும் சமூகத்தையும் பற்றி கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையி...