Tuesday, July 2, 2024

MUSIC TALKS - EMBUTTU IRUKKUDHU AASAI UN MELA ADHAI KAATTA POREN - AMBUTTU AZHAGAIYUM NEENGA THALATTA KODI YETHA VAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்
உள்ளத்தை கொடுத்தவன் ஏங்கும்போது 'உம்'-முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க ! கேட்க வேணாம் அம்மம்ம அசத்துறியே
கொட்டி கவுக்குற ஆளையே இந்தாடி !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

கள்ளம் கபடம் இல்ல உனக்கு,  என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய சொக்கி கிடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காததை இப்போ நீ காட்டிட விஷம் போல ஏறுதே சந்தோஷம் !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி
கன்ன கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா உன்ன ரசிக்கனும் தூக்கி வந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு என்னை இருட்டிலும் நீ அருந்து
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற ? மலை ஏற ஏங்குறேன் உன் கூட !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....