Sunday, July 7, 2024

GENERAL TALKS - இந்த உலகத்திலேயே ரொம்ப கடினமான விஷயம் !

 



கணினி விளையாட்டுக்களில் இருப்பது போல வாழ்க்கையிலும் கடினமான லெவல்கள் இருக்கிறது. கஷ்டங்களுக்கு பயப்பட்டால் சாவுக்கு பயப்பட்டால் இங்கே எதுவுமே பண்ண முடியாது. தனித்து வேலை பார்ப்பது மிகவுமே சலிப்பு கொடுக்கும் செயல். கண்டிப்பாக யாராவது ஒருவருடைய ஆதரவு வேண்டும். இந்த உலகத்துடைய தொடக்கத்தில் இருந்தே சக்திகள் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்குதான் ஆதரவும் அதிகமாக கிடைத்து இருக்கிறது. இந்த ஆதரவுக்கான தேடல் எனக்கும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வலைப்பூவை படிக்கும் யாராக இருந்தாலும் இந்த நொடியில் என்னுடைய இயலாமையையும் சக்திகளற்ற பாதிக்கப்பட்ட நிலையையும் நினைத்து நான் எந்த அளவுக்கு வருத்தப்படுகிறேன் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள முடியாது. இங்கே எனக்கு மாயாஜாலமாக படும் விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் குறிப்பிட்ட விஷயங்களை எழுத்துப்பூர்வமாக தெரிந்துகொள்ள முடியாது. நம்முடைய அனுபவத்தால் மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு 'எப்போதுமே போதுமான பணம் நம்முடைய கைகளில் இருந்தால்தான் நம்முடைய உடலும் மனதும் மிகவும் சரியான நிலையில் இருக்க முடியும்'- இந்த கருத்தை நான் அனுபவத்தால் மட்டும்தான் கற்றுக்கொண்டேன். இந்த விஷயத்தை புத்தக அறிவு கற்றுக்கொடுக்கும் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முட்டாள்தனம்தான். கஷ்டப்பட்டு அடையும் அனுபவங்களும் அதனால் உருவாகும் அறிவும் மட்டும்தான் கற்றுக்கொடுக்கும். நிறைய நேரங்களில் என்னுடைய திட்டங்கள் மிகவுமே சரியானதாக இருந்தாலும் அந்த திட்டங்களை செயல்படுத்த உடலும் மனதும் இணைந்து செயல்பட முடியாமல் போகும் தற்காலிகமான நிலைகளை நான் அடைந்து இருக்கிறேன். இதனை அறிவியல் அடைப்படையில் சொன்னால் டோபமைன் செயல்பாடுகளில் இருக்கும் பிரச்சனைகள் என்று சொல்லலாம். பிரச்சனைகள் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து தொலைக்கட்டும் இந்த பிரச்சனைகளால் பணத்தால் நஷ்டம் அடைவது சம்மந்தப்பட்ட பாதிப்புக்கு உள்ளான மனிதர்தான் அல்லவா ! இந்த பிரச்சனைகள் தற்காலிகமான விஷயங்கள்தான். நிரந்தர தீர்வுக்காக வேலை செய்து நிரந்தர தீர்வை உருவாக்கவில்லை என்றால் நாம் கஷ்டப்பட்டு சேகரித்த வாழ்நாள் சேகரிப்புகளை நாம் இழந்துவிடுவோம். ஒரு பேரரசனுடைய உண்மையான கௌரவம் அவன் எத்தனை இரத்தின கிரீடங்களை சூட்டிக்கொள்கிறான் என்பதோ எத்தனை மதிப்பு மிக்க ஆடைகளை அணிகிறான் என்பதோ கிடையாது , எத்தனை நேரம் போர் கவசங்களையும் ஆயுதங்களையும் தாங்கிக்கொண்டு இருக்கிறான் என்பதுதான். சண்டை போட பயப்படுவதும் கோழைத்தனம் அல்ல ! பிரச்சனைகளை கண்டு பின்வாங்குவதும் பிரச்சனைகள் கொடுக்கும் குழப்பங்களில் கலந்து மூளையை தொலைப்பதும் ஒரு விதமான கோழைத்தனம்தான். இது வீரனுக்கு அழகு கிடையாது. நமக்கான வயதும் அனுபவங்களும் நம்மோடு உதவ எப்போதுமே காத்துக்கொண்டு இருக்கின்றன. நாம்தான் அவைகளை பயன்படுத்த மறுக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த அனைத்து விஷயங்களிலும் தனியாக கஷ்டப்பட்டது நான்தான் அதனால்தான் இத்தனை கடின தன்மை இருக்கிறது என்பதை இங்கே பதிவு பண்ணுகிறேன் !!


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....