Sunday, July 7, 2024

GENERAL TALKS - நடக்கக்கூடிய விஷயங்களுடைய உண்மைத்தன்மை !



நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களுக்கு நிறைய நேரம் நாம் வேண்டுமென்றே பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் போகின்றோம். இது எப்போதுமே தவறானது. சமீபத்தில் ஒரு காணொளியை காண நேர்ந்ததது. பட்ட பகலில் யூட்யூபர் வைத்து இருந்த காமிராவை ஒரு ரவுடி மிரட்டி பறிமுதல் பண்ணிவிட்டான். இந்த மாதிரியான சட்டம் ஒழுங்கு குறைபாடு நடக்க காரணமும் தப்பான விஷயங்கள் நடக்கும்போது பொறுப்பு எடுத்துக்கொள்ளாமல் இன்னைக்கு யாரோ ஒருவருக்கு நடக்கிறது என்பதற்காக நாளைக்கு எனக்கு நடக்காது என்ற அலட்சியம்தான். இன்னொரு பக்கம் யாருக்குமே பொறுப்புகளை எடுத்துக்கொள்ள சக்திகளையும் பிரபஞ்சத்தின் சக்தியாளர் கொடுப்பது இல்லை. இந்த அதிசயமான செயல்பாட்டுக்கு காரணம் என்னவென்றால் யாரேனும் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பதாலும் குற்றங்கள் இருக்கும் வரைதான் பிரபஞ்சத்தின் சக்தியாளருக்கு சக்திகள் இருக்கும் என்பதாலும்தான் என்று நான் நம்புகிறேன். இதுவுமே தவறான விஷயம். பொய்களால் நிறையவே உலகத்தை நிறைத்துவிடாலாம் ஆனால் உங்களுக்கு உண்மையாக இருந்தால்தான் உங்களால் முன்னேற முடியும். இணையத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்டுள்ள சண்டை பயிற்சி திறன் மிக்க ஒரு நபரை பார்க்கின்றீர்கள் என்றால் நீங்கள் நானும் ஒரு கட்டுமஸ்தான நபர் என்று பொய் சொல்வதன் மூலமாக ஏதேனும் அதிசயம் நடந்து உங்கள் தொப்பை குறைந்து சதை பெருத்து நரம்புகள் இறுகி எலும்பு வலிமை அடைந்து நீங்கள் வீர சூரராக ஆக முடியுமா என்ன ? இங்கேதான் பொய்களை சொல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் பொய்களால் உங்களால் மேலோட்டமான சின்ன சின்ன பிரச்சனைகளில் இருந்து தப்பி செல்லலாம் ஆனால் பெரிய பிரச்சனை வந்தால் வாழ்க்கை நீங்கள் 1.8 மீட்டருக்கு குழியை தோண்டி நீங்களே விழுந்து மண்ணை போட்டு உங்களை நீங்களே அடக்கம் பண்ணிக்கொண்டால்தான் நீங்கள் இந்த பெரிய பிரச்சனையில் இருந்து தப்பி செல்ல முடியும் என்று ஒரு நிலைக்கு உங்களை கொண்டுபோய்விடும். கவனமாக இருந்தால் வீரமும் வெற்றியும் உங்களுக்காக காலத்தால் உறுதிப்படுத்தப்படும். இல்லை என்றால் இல்லை. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...