இந்த படம் ஒரு ஸ்டாப்மோஷன் அனிமேஷன் திரைப்படம். ஒரு வைல்டு லைஃப் அட்வேஞ்சர் சாதனையாளர் நம்ம பூமியில் மிகவும் அரிதாக உயிர் வாழும் க்ரீயேச்சர்களை கண்டறிந்து அவைகளின் அரிதான ஃபோட்டோகிராப்களை எடுத்து சாதனைகளை படைப்பதை கொண்டு தொடங்குகிறது. இந்த முறை சவால் எல்லாம் விட்டு கண்டறிந்து ஒரு கிரேயேச்சர் யார் என்றால் ஒரு ஆதிகால மனிதன் ஆனால் மனிதர்களோடு பேசி பழகியதால் நன்றாக பேசி பழகும் புத்திசாலியான மனிதர். இந்த மலைவாழ் மனிதரை இவரை போலவே உயரமான மனிதர்கள் எங்கே மறைந்து வாழ்கின்றனர் என்று கண்டறிந்து அவர்களோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நட்பு முறையில் உதவி பண்ணுவதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ஸ்டாப் மோஷன் கிராபிக்ஸ் இந்த படத்தில் வேற லெவலில் செய்து இருக்கிறார்கள். ஒரு ஒரு சின்ன சின்ன நுட்பமான பின்னணி காட்சிகள் கூட மிகவும் அழகாக பிரகாசிக்கிறது. கதையோ கதைகளின் காட்சிகளின் நகர்த்தலோ எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் மார்கெட்டிங் செலவு மிக மிக அதிகம் என்பதால் ஒரு பிரச்சனை மேலும் ஸ்டாப் மோஷன் காட்சிகளில் எப்போதும் நிறைய செலவுகள் இருக்கிறது என்பதால் ஒருமுறை காட்சியை எடுத்துவிட்டு மறுபடியும் எடிட்டிங் போட்டு கத்தரித்துவிட முடியாது. சினிமா தயாரிப்பு என்பது எப்போதுமே கடினமான ஒரு விஷயம். இந்த படம் டிசைனிங் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். அனிமேஷன் காட்சிகளின் தத்துரூபத்தன்மை என்னவோ நம்ப முடியாத அன்காணி வாழி எஃபெக்ட் என்ற விஷயத்தை உருவாக்கியது என்றாலும் இந்த வகையில் இந்த படம் மிகவும் கஷ்டமான புராஜக்ட். இந்த படம் வெளிவந்த காலங்களில் நிறைய போட்டியில் இருக்கும் படங்கள் எல்லாம் வெற்றி அடையும்போது இந்த படமும் தோற்கடிக்கப்பட்டுகிறது. கதையில் இன்னுமே வொர்க பண்ணி இருக்கலாம் மேலும் கிளைமேகஸ் இன்னுமே பெரிய அளவில் எடுத்து இருக்கலாம் என்று எனக்கு ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது ஆனால் இந்த மாதிரியான ஸ்டாப்மோஷன் படங்களில் நினைத்த காட்சிகளை அப்படியே திரையில் கொண்டுவந்துவிட முடியாது. இந்த விஷயத்தை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். மற்றபடி இந்த படம் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு உள்ளது. கண்டிப்பாக பாருங்கள்.
No comments:
Post a Comment