Friday, July 26, 2024

GENERAL TALKS - காலம் நேரம் அமையாததால் புரிந்துகொண்ட விஷயங்கள் !



ஒரு தனியார் நிறுவனத்தை உருவாக்குவதற்கான என்னுடைய முயற்சிகள் மற்றவர்களுடைய முயற்சிகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. போதுமான பணத்துக்காக நான் நிறைய இடங்களில் முயற்சி செய்தாலும் அனைத்து இடங்களிலும் எனக்கு கிடைப்பது ஏமாற்றமே ! இந்த உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் விழி டைம் என்று அழைக்கப்படும் காலம் மற்றும் என்விரான்மென்ட் என்று அழைக்கப்படும் சூழ்நிலையால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த மனிதர்களுடைய வாழ்க்கையில் எப்படி இருள் நிறைந்த சூழ்நிலைகள் வருகிறது. இந்த இருள் ஒருமுறை மனிதனுடைய வாழ்க்கையில் வந்து விட்டால் இந்த இருளில் இருந்து மனிதன் வெளியே வருவதே மிகவும் கடினம். இருள் மனித வாழ்க்கையை பாதிக்க மட்டுமே உருவாகிறது. இந்த இருளினால் மனிதனுக்கு எந்த விதமான நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக மனிதன் தீமையின் பாதையில் தள்ளப்படுகிறான் மனிதன் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு தகுதியற்றவனாக அவனை நினைக்கிறான். மனிதன் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இத்தகைய நினைப்பால் மட்டுமே கைவிடுகிறான். உண்மையை சொல்ல போனால் எந்த விதமான முயற்சியும் செய்யாத மனிதனுக்கு கூட ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமாவது தகுதி இருக்கிறது. இருந்தாலும் ஒரு மனிதன் இந்த இருளில் மாட்டிக் கொண்டிருக்கும் போது மனிதன் அவனுடைய கௌரவத்தையும் மரியாதையும் இழந்து விடுகிறான். தன்னைத் தகுதியற்றவனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த இருள் மிகவும் சாதாரணமாக முடிந்துவிடப் போவதும் இல்லை இந்த இருள் மனிதர்களுக்குள்ளே கெட்ட எண்ணங்களை அதிகமாக விதைத்து கொண்டு வளர்த்துக் கொண்டே இருக்கிறது கெட்ட இனங்கள் வேலி முள்ளை போல மண்ணின் சத்துக்களையும் தண்ணீரையும் உறிஞ்சி மற்ற மரங்களை வளர விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது. மனிதன் சிறப்பான உணவை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும் பூமியைப் போல வாழாமல் கசப்பான தண்ணீரை மட்டுமே கொடுக்கக்கூடிய கடல் நீரை போல வாழ்ந்து விட்டு அவனுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான். அடிப்படையில் வெறுப்பால் உருவான இந்த கடல் அவனுடைய வாழ்க்கையில் இருக்கும் மற்றவர்களுக்கும் இதே போன்ற வாழ்க்கை முறையை பயன்படுத்த வேண்டும் என்று கிளாஸ் எடுத்துவிட்டு தான் சென்று விடுகிறது. இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் நிறைந்த இருளுக்குள் நான் நிறைய முறை மாட்டிக் கொண்டு உள்ளேன் ஆனால் ஒருவரும் முறையும் நான் கஷ்டப்பட்டு வெளியே வந்துள்ளேன். இந்த முறையும் நான் கஷ்டப்பட்டு வெளியே வந்து விடுவேன் என்று என்னை நானே நம்புகிறேன். இவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும். இது இன்றைய நாளுக்கான என்னுடைய வலைப்பூ கருத்து பதிவு !

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....