Tuesday, July 2, 2024

MUSIC TALKS - KANNAI KAATU PODHUM NIZHALAGA KOODA VAAREN INNUM ENNA KELU KURAIYAMA NAANUM THAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


நெஞ்சுல பூ மழையை சிந்துற உன் நினைப்பு என்ன தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச நான் வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதைனாலும் உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறி அடிச்சு என்னை நீ சாயிச்சே
சக்கர வெயில் அடிச்சு  சட்டுன்னு ஓய்ஞ்ச
இறக்கையும் முளைச்சுடுச்சு கேட்டுக்கோ கிளி பேச்சை !

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்


தொட்டதும் கைகளுல ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என்னை தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும் நீ தூரம் நின்னால் தாங்கலே
கட்டிலிடும் ஆசையால என் கண்ணும் ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து 
சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து
உன்னை என் உசுருக்குள்ள வைக்கணும் அட காத்து


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...