Friday, July 26, 2024

CINEMA TALKS - SURAA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இந்த படம் தளபதி விஜய் நடித்து வெளிவந்த ஒரு கமேர்ஷியல் மாஸ் திரைப்படம். சன் பிக்ச்சர்ஸ்ஸின் மேஜர் வெளியீடு என்றாலும் கதை களத்தில் அதிகமாக ஒர்க் பண்ணி இருக்க வேண்டிய ஒரு திரைப்படம் என்றே சொல்லலாம்.  இந்தப் படத்தில் கதை என்ற பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் பாடல் காட்சிகள் மேலும் விஜயின் சுவாரசியமான நடிப்பு திறன் இந்த படத்தைக் காப்பாற்றி உள்ளது. கடலோரத்தில் வாழும் மீனவர்களுடைய வாழ்க்கையில் வாழ்வியலை சொல்லும் இந்த திரைப்படமானது சீரியசான பிரச்சினைகள் ஒரு பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது கமர்சியல் படங்களுக்கே ஏற்ற காமெடி ஆக்சன் ரொமான்ஸ் போன்ற விஷயங்களை நன்றாக அளவுக்கு அதிகமாக சர்க்கரையை போல கலந்துவிட்டது. மணிஷர்மா இசை அமைத்த தெலுங்கு திரைப்படத்தின் பயன்படுத்தப்பட்ட பாடல் காட்சிகளை மறுபடியும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படல் காட்சிகளில் மிகவும் சுவாரசியமான புதிய விஷயங்கள் என்று எதுவும் இல்லை ஆனால் காட்சி அமைப்பு என்ற வகையில் பாடல் காட்சிகளுக்கு நன்றாகவே காட்சி அமைப்பு கொடுத்துள்ளார்கள். நடிப்பு பிரமாதமாக இருக்கிறது இயக்கமும் பிரமாதமாக இருக்கிறது இருந்தாலும் கதையில் நன்றாக வேலை பார்த்திருக்க வேண்டும் குறிப்பாக இந்த படத்திற்கு சில வருடங்கள் முன்னால் வெளிவந்த அயன் திரைப்படத்தை பாருங்களேன் ! அயன் திரைப்படத்தை வந்ததுக்கு பின்னால் தமிழ் சினிமாவில் கதை எப்படி எழுத வேண்டும் என்று எழுத்துடைய முக்கியத்துவம் என்னவென்றும் நிறைய படங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கதை சுவாரசியமாக இல்லை அதனால் திரைப்படம் சுவாரசியமாக இல்லை அதனால் திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்பது தான் இந்த படத்தின் டிசப்பன்மெண்டான ரிசப்ஷனுக்கு காரணம் என்று சொல்லலாம். வேட்டைக்காரன் போன்ற படங்களை பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்ற கமர்சியல் படங்களுக்கே உரிய சஸ்பென்ஸ் அந்த படத்தில் இருக்குமாறு கதையை நகர்த்தி இருப்பார்கள் ஆனால் சுறா படத்தில் அத்தகைய சஸ்பென்ஸ் இல்லாமல் போனதுக்கு காரணம் என்ன என்று இன்றுவரை புரியவில்லை.

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....