Thursday, July 25, 2024

MUSIC TALKS - EPPO NEE ENNAI PAARPA EPPODAA EN PECHAI KEPPA EPPO NAAN PESA KETTA PAIYAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



எப்போ நீ என்னை பார்ப்பே ? எப்போ என் பேச்ச கேட்பே ?
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?
எப்போடா கோவம் குறையும் ! எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?


எப்போ நீ என்னை பார்ப்பே ? எப்போ என் பேச்ச கேட்பே ?
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?
எப்போடா கோவம் குறையும் ! எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச ? கெட்டப்பையா ?


நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறென்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா ?


கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா !


மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா !


உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயம் என்று ரசித்தேனேடா
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா !
அட என்னை தவிர எல்லா பெரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்ற சொல்லே வேண்டாம்டா !


எரிமலை கண்கள் இரண்டு பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்டப்பையா !
பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்டப்பையா !


உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா !
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா !
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா ?
---

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....