Friday, July 26, 2024

GENERAL TALKS - சந்தாதாரராக மாறுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது !





நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் நாட்களை நகர்த்துவதற்கு தேவையான சக்தி என்னிடம் தேய்ந்து கொண்டே இருக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் என்னுடைய மனதுக்கு தோன்றுவது என்னவென்றால் இப்படியே வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தால் என்னுடைய கனவு தனியார் நிறுவனத்தை எப்போதுமே உருவாக்க முடியாது என்பதுதான். நிச்சயமாக நான் நினைத்தவாறு கனவு நிறுவனத்தை உருவாக்கும் பட்சத்தில் என்னால் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். இருந்தாலும் விதியின் கணிப்பு என்னுடைய நேரடியான மோதலுக்கு நேர் எதிராக உள்ளது. விதி தன்னுடைய கவசங்களை நம்பி என்னை சாகடிக்கும் நோக்கத்துடன் இப்போது பலமாக சண்டை போடுகிறது ஆனால் நான் வெறும் கையில் விதியை போல ஒரு பலம் பொருந்திய எதிரியோடு சண்டை போடுகிறேன். என்னுடைய வெற்றிக்கு தேவையான கருவிகளும் போதுமான ஆதரவும் எப்போதும் எனக்கு கிடைப்பதே இல்லை. பெரும்பாலான நேரங்களில் கனவு நிறுவனத்தை உருவாக்க முயற்சிக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தையும் சக்தியையும் நம்பிக்கையையும் மக்களிடம் சேர்த்துக் கொண்டே வாருங்கள். சரியான நேரத்தில் பணத்தினால் கிடைக்கக்கூடிய சக்திகளும் தேவையான நம்பிக்கையால் கிடைக்கக்கூடிய ஆதரவும் உங்களுக்கு துணையாக இருக்கும். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டில் ? ஒரு பணக்கார நிறுவனத்தின் தலைவர் ஒரு ஒரு சராசரி மக்களின் தலையிலும் அவருடைய தனிப்பட்ட செலவுகளை சேவைகளின் கட்டண அதிகரிப்பு என்ற வகையில் பொதுமக்கள் தலையில் இடியை இறக்குவது போல இறக்குகிறார் இப்படியான மின்னலைப் போல இறங்கும் அதிர்ச்சியை தாக்குபிடிக்கும் முன்னதாகவே இன்னும் பணத்தையும் கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டே இருக்கிறார். தனியார் நிறுவனங்கள் பைனான்ஸ் என்ற வகையில் பணத்தை கொடுத்து சராசரி மக்களுடைய வாழ்வாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறார்கள் என்பதை நான் சொல்லவா வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு குறைந்து கொண்டே போகும்போது  இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சக்திகள் மிக மிக அதிகமாக  மாறும்போது உலக நாடுகளில் எல்லாம் அதிகாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே எடுத்துக் கொள்ள முயற்சிக்குமோ அதேபோலத்தான் இத்தகைய நிறுவனங்களும் அதிகாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் என்பது ஆட்சிகளை செய்யும் இந்த உலகத்தின் அரசியலுக்கு தெரியாமலா போகிறது ? நடப்பது எதுவுமே நன்மைக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மக்களே !  இந்த விஷயங்களை கவனிக்காமல் விட்டால் சராசரியாக மனிதர்களுக்கு தேவைப்படக்கூடிய காய்கறிகள் தானியங்கள் போன்ற உணவு வகைகளையும் கூட இவர்கள் விலை உயர்த்தி விடுவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகட்டி நிற்பதை பார்க்கும் போது தான் மனதுக்கு வருத்தமாக உள்ளது. இதுதான் இந்த வலைப்பூவின் இன்றைய கருத்து இந்த வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுவதன் மூலமாக இந்த வலைப்பூவை பேராதரவு கொடுத்து நிறைய சம்பாதிக்க வைக்குமாறு கம்பெனி சார்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....