Thursday, July 25, 2024

GENERAL TALKS - கௌரவமான வாழ்க்கையை அடைய முடியுமா ?


இங்கே நாளுக்கு நாள் சட்டம் மற்றும் ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது . இன்றைக்கு தேதிக்கு கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால் போதை பொருள் செடிகளை நடவும் குறைந்த அளவில் போதை பொருட்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்குகிறது ஒரு பணக்கார நாட்டின் அரசாங்கம் . இப்படி எல்லோருமே உணவு பொருட்களை விவசாயம் பண்ணுவதை விட்டுவிட்டு போதை பொருட்களை மட்டும் விவசாயம் பண்ண ஆரம்பித்தால் சாப்பாட்டுக்கு என்ன  பண்ணுவார்கள் ? கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்தால் இப்படி எல்லாம் யோசிப்பார்கள் ? சரியான மாங்காய் மடையர்களாக இருக்கும் இந்த முட்டாள்கள் அதிகாரத்தில் இருக்க காரணம் என்ன ? எதனால் படித்த பண்பான மனிதர்கள் , சாமர்த்தியமாக யோசிக்கும் மனிதர்கள் உலக அரசியலில் இல்லை ! எல்லோருமே வேஸ்ட் தானா ? இந்த வகையில் சம்பாதிப்பது உள்ளூர் காவல் துறையால் தட்டிக்கேட்கப்படாமல் போனால் தப்பான தொழில் பண்ணுபவர்களுக்கு நிறைய பணம் கொடுத்து அவர்களை ஒரு குட்டி மாஃபியாவாக மாற்றிவிடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை !  இவர்கள் மக்களுக்கு போதை விஷயங்களை வழங்கி பெரிய ஆட்களாக ஆனதும் உள்ளுர் பாதுகாப்பு துறைக்கு லஞ்சம் கொடுத்து சந்தோஷமாக நெட்வொர்க்கை விரிவுபடுத்தி குறைந்தது பத்து வருடங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் ஸ்பெக்ட்டர் என்ற கொலைகார அமைப்பை போல ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கிவிடுவார்கள் மக்களே. இந்த போஸ்ட் ஒரு விழிபபுணர்வு உருவாக்க மட்டுமே. காவல்துறை அதிகாரிகளை இதுபோன்று போதையில் பணத்தை பார்க்கும்  நாசவேலை செய்யும் ஆட்களுக்கு ஆதரவு கொடுக்க வைத்தால் இவர்கள் கிட்டத்தட்ட அந்த அந்த ஏரியாக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடிகளக மாறிவிடும் அபாயம் உள்ளது.  இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய சக்திகளே கைகளை கட்டிக்கொண்டு பணத்தால் வாயடைத்து நிற்பதுதான் பரிதாபமாக இருக்கிறது. குறிப்பாக சாலையில் இரண்டு பேரை பணக்கார இளைஞர்கள் ஆக்ஸிடென்ட் பண்ணி காலி பண்ணிவிட்டு தண்டனை கொடுக்கப்படாமல் விடுதலை பண்ணுவதை பார்க்கும்போதே மனதே உடைந்துவிட்டது , மனிதத்தன்மை இந்த உலகத்தில் உயிர் பெறும் என்ற கருத்துகளும் உடைந்துவிட்டது. மனித தன்மை சட்டம் ஒழுங்கு காலியாகும்போது கண்டிப்பாக காலியாகிவிடும் மக்களே. சொல்லப்போனால் மனிதர்களுடைய உயிருக்கே ஆபத்தை உருவாகும் அபாயங்கள் இதுபோன்று சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் உருவாகும் மக்களே.  கார் விபத்து பண்ணிய அந்த இளைஞர்களுக்கு என்னமோ லீவு லெட்டர் எழுதி கொடுங்கள் என்பதை போல மன்னிப்பு லெட்டர் மட்டும் எழுதி கொடுத்தால் போதுமானது என்று விடுதலை பண்ணியது ஒரு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு என்றால் ஏழைகளாக பிறந்த மக்கள் வேறு எப்படித்தான் அவர்களுடைய உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் ? யோசித்து பாருங்கள் மக்களே ! முடிவை எடுங்கள் . கௌரவமான வாழ்க்கை வேண்டும் என்றால் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....