பொதுவாக கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி எப்போதுமே சட்டை மடித்துக் கொண்டு சண்டைக்கு வரும் அமைப்பு என்பதாலும் போதுமான பிளான்கள் இல்லாமல் தான் களத்தில் இறங்குவார்கள் என்பதாலும் இந்த படத்தில் இந்த வில்லனை எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் வரையில் நன்றாகவே கொண்டு போயிருக்கிறார்கள். மற்றபடி கிறிஸ்துமஸ் காட்சிகள் நிறைந்த ஒரு தனித்த டெலிவிஷன் திரைப்பட நாடகம் இருந்தாலும் இந்த படத்துக்கு எந்த வகையிலும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டும் என்றால் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி அமைப்பை பற்றி சொல்ல வேண்டிய இந்த கதை மொத்தமாக ராக்கெட் ரக்கூன் என்ற சப்போர்ட்டிங் கேரக்டருடைய வாழ்க்கையை பற்றியே சொல்லிக்கொண்டு இருப்பதுதான். பொதுவாக மார்வேல் படங்கள் நன்றாக திரைக்கதை வேலைப்படுகளை செய்வதுதான் இருந்தாலும் சென்ற ஆண்டின் வெளியீட்டு படங்களை பார்க்கும்போது தரமான வில்லன்கள் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் இந்த படத்திற்கான வில்லன் மிகவும் சரியான வில்லத்தனத்தில் இருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் தனக்கு மனதுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பிளானட்டையே மொத்தமாக அழிக்கும் அளவிற்கு சிறப்பான சக்தி வாய்ந்த புத்திசாலித்தனமான வில்லனாக இருக்கிறார் . சென்ற படங்களின் இடம்பெற்ற கார்டியன் சாவத்த கேலக்ஸி படத்தின் நகைச்சுவையான காட்சிகளையும் திரைக்கதை அமைப்பையும் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் படத்துக்கு இந்த காட்சிகள் சீரியஸாக இருந்தால் தான் தனியாக இருக்கிறது. டாக்டர் ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆப் மேடனெஸ் என்ற படத்தின் திரைப்படத்திற்கு பின்னால் நிறைய படங்கள் வந்திருந்தாலும் கிட்டத்தட்ட மார்வெல் திரைப்படத்திற்கு தேவையான தரத்துக்கு ஒரு படம் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும்படியான இந்த படம் தான்.
No comments:
Post a Comment