Wednesday, July 17, 2024

MUSIC TALKS - NINAIVUGAL NENJINIL PUDHAINDHATHINAAL NERUPPAAL ENDHAN NENCHAI SUDUKINDREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால் கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக என்னைப் பிரிய காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே ! என்னால் ஏனோ முடியவில்லை !
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை !

காத்திருந்து காத்திருந்து பழகியவன் நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன் நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால் கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக என்னைப் பிரிய காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே ! என்னால் ஏனோ முடியவில்லை !
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை !

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....