Wednesday, July 17, 2024

GENERAL TALKS - மொத்தமாக எழுதுவதை கைவிடலாமா ?




இங்கே எழுதும்பொது மட்டும்தான் போதுமான வருமானம் இல்லாமல் வாழக்கூடிய கொடூர நிலை எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள முடிகிறது. நடப்பவை எல்லாமே தவறாக உள்ளது. உலகம் தப்பான வழியில் பணத்தை சேகரிக்க மட்டுமே முயற்சிக்கிறது. அபபடி தவறான வழியில் பணத்தை சம்பாதிப்பவர்களே நன்றாக இருக்கிறார்கள். இந்த பிரபஞ்சாத்துக்கு இருக்கும் மொத்த சக்திகளையும் பயன்படுத்தி இந்த பிரபஞ்சம் என்னை தோற்கடிக்கிறதா என்று மனதுக்குள் மிகவும் வலியாக உள்ளது. எனக்கென்று யாருமே ஆதரவு இல்லாதபோது இப்படி நிறைய கட்டாயமான பணத்தின் செலவுகள் (மெடிக்கல் செலவுகள் , வாடகை , பெட்ரோல் என்று எல்லாமே ) நான் முழு நேரமாக பண்ணும் எழுத்து மூலமாக கிடைக்கும் வருமானத்தில் எல்லாமே பண்ண முடியவே இல்லை. தமிழ் மொழியில் பெரிய லெவல் வலைப்பூ இதுதான். இந்த வலைப்பூ இன்னும் மேலே வரவேண்டும் என்று கம்பெனி ஆசைப்பட்டாலும் நான் ஆசைப்பட்டாலும் கடவுளுக்கு ஆசை இல்லையே. நான் நாசமாக போகவேண்டும் என்று இந்த நல்ல தம்பி பண்ணிய நாசவேலைகள் ஏராளம் இருக்கிறது. மனது மிகவும் அதிகமாக வழிக்கும்போது எனக்கு நானே எத்தனை முறைதான் ஃப்ரீ பயர் கேரக்ட்டர் போல மெடிக்கல் உதவிகளை பண்ணிக்கொள்வது. எனக்கான ஆதரவை எனக்கு கொடுக்க வேண்டும்/ இப்போது நான் இருக்கும் நிலைக்கு சக்திகள் மட்டுமே போதாது. ஆதரவான மக்களும் தேவை. வாழ்க்கையில் பாதியை நான் ஆதரவு இல்லாமல் வாழ்ந்துவிட்டேன். எனக்கென்று சப்போர்ட்டுக்கு ஒரே ஒரு பெர்ஸன் இருந்தால் போதுமானது. என்னுடைய தனிமை என்னை நன்றாக வைத்து செய்வதால் என்னால் எதுவுமே பண்ண முடியவில்லை. நான் எக்ஸட்ரோவேர்ட் , நான் என்னோடு நிறைய பேர் இருந்தால்தான் சந்தோஷமாக இருப்பேன். தனிமையாக இருக்கும் வாழ்க்கை மயிரை போல இருக்கிறது. மன்னிக்கவும் சென்ஸார் பண்ணிவிடுகிறேன். கூந்தலை போல உள்ளது. ஏதாவது பண்ணுங்கள் இந்த பிரபஞ்சத்தின் சக்தியாளரே ! உங்களுடைய ஆச்சரியத்தை உலக அதிசயத்தை நிகழ்த்துங்கள் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...