Sunday, July 28, 2024

GENERAL TALKS - வியாபாரம் என்பதே விதிமுறையற்ற போராட்டம்தான் !



பெரும்பாலான மக்களும் வியாபாரத்தில் இறங்கும் போது வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் இறங்குகிறார்கள். நீங்கள் ஒரு தூண்டிலுடன் குளத்துக்கு செல்கிறீர்கள் அந்த தூண்டிலை யாருடைய போட்டியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக குளத்தில் விடுகிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக காத்திருக்கிறீர்கள் மீன் வந்து சிக்குகிறது அந்த மீனை இலாவகமாக கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். இதுதான் வியாபார உலகமா என்று கேட்டால் இது வியாபார உலகம் இல்லை. வியாபார உலகம் என்பது நேரடியான ஒரு போரை போன்றது இங்கு யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும் கத்தியால் குத்தலாம். இந்த உலகத்தில் வியாபாரம் செய்பவர்கள் எடுப்பதுதான் முடிவு.  வியாபாரம் செய்பவர்கள் சொல்வதுதான் சட்டம். இந்த வியாபார உலகத்தில் இருக்கக்கூடிய போட்டியை யாருமே கவனிப்பதே இல்லை. இங்கே பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்ல அந்த பணத்தை பாதுகாக்க வைப்பது கூட நீங்கள் உயிரை பணயம் வைத்து போராடக் கூடிய ஒரு முயற்சி தான். குறிப்பாக வியாபார உலகத்தில் இருக்கக்கூடிய வேகமும் போராட்டமும் உங்களுடைய மனதையும் உடல் நலத்தையும் கண்டிப்பாக பாதிக்கக் கூடியது. விறுவிறுப்பான ஒரு வியாபாரம் ஆனது உங்களுடைய மனதுக்குள் பைட் ஆர் ஃபைளைட் ரெஸ்பான்ஸ் என்று சொல்லக்கூடிய ஒரு இரசாயன மாற்றம் உருவாக்கி உங்களை போராட வேண்டும் அல்லது பறந்தே செல்ல வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக உங்களுடைய உடலுக்குள்ளே அதிகரிக்கும் கார்ட்டிசால் என்ற ரசாயன மாற்றம் உங்களுடைய உயிரைக் கொல்லும் இதய நோய்களையும் உயர்வான இரத்த அழுத்தத்தையும் உங்களுக்கு உருவாக்கலாம் இருந்தாலும் இதுதான் உங்களுடைய வியாபார உலகம். உங்களுடைய நண்பர்கள் என்று இங்கு யாருமே கிடையாது உங்களுடைய எதிரிகள் என்று இங்கே எல்லோருமே இருப்பார்கள். இதனால்தான் மிகவும் தெளிவாக சொல்கிறேன் வியாபாரம் என்பது ஒரு போர். இது எக்கனாமிக்ஸ் என்ற ஒரு மிகப்பெரிய உலகத்தின் ஆட்சியில் யார் யாரெல்லாம் பணத்தோடு இருக்கிறார்கள் என்று தேர்ந்தெடுக்க கூடிய ஒரு போர். எகனாமிக்ஸ்ஸின் உலகத்தில் நடக்கக்கூடிய இந்த போரை நீங்கள் நிஜமாகவே வெற்றி அடைய வேண்டும் என்றால் அதுவும் சாவதற்குள் வெற்றியை அடைய வேண்டும் என்றால் உங்களிடம் சிறப்பாக போர் திட்டம் இருக்க வேண்டும் அதனை சரியாகவும் நீங்கள் செய்து காட்ட வேண்டும். வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எழுதும் புத்தகம் தான் வரலாறு. வியாபாரத்தில் ஜெயிப்பது என்பது ஸ்போர்ஸில் ஜெயிப்பதை விட பல லட்சம் மடங்கு கடினமானது. இப்போது எல்லாம் ஒரு கலாச்சாரம் தொடங்கிவிட்டது தங்களுக்கு பிடித்த நடிகர்கள் ஜெயித்துவிட்டால் தாங்களே ஜெயிப்பதாக நினைக்கிறார்கள். இது எப்படிப்பட்டது என்றால் தங்களுக்கு எதிராக உள்ள தங்களை விட பெரிய போட்டி கம்பெனி ஜெயித்து விட்டால் அது நாமே ஜெயித்ததற்கு சமம் என்று நினைத்துக் கொள்வது போல தான். இந்த மாதிரியான முட்டாள்தனமான தடைகளை விட்டுவிட்டு வியாபாரம் என்றால் என்னவென்று அடிப்படையில் இருந்து கற்றுக்கொண்டு கொஞ்சமாவது முன்னேற பாருங்கள். மூளையற்ற மனிதனாக இருந்து விடாதீர்கள் என்பதுதான் இன்றைய நாளில் வலைப்பூவில் நம்முடைய கருத்து. இந்த வலைப்பூவின் பதிவுகளுக்கு பேராதரவு கொடுத்து வெற்றி முடிவு செய்யுமாறு தங்களிடம் கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment

MUSIC TALKS - POO MAALAIYE YENGUM IRU THOL SERA VAA - ILAIYA MANADHU INAIYUM POLUDHU - POOJAI MANI OSAI POOVAI MANADHASAI PUTHIYATHOR ULAGILE PARANTHATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

பூமாலையே ஏங்கும் இரு தோள் தோள் சேரவா இளைய மனது இணையும் பொழுது … பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ! நான் உன்னை நினைக்காத நாள...