ஞாயிறு, 7 ஜூலை, 2024

GENERAL TALKS - கடந்த காலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் !

 




நம்முடைய கடந்த காலத்தை நாம் எப்போதுமே மறக்க கூடாது. இன்றைக்கு தேதிக்கு நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை நாம் பார்த்துவிடுகிறோம். இந்த அனைத்து கஷ்டங்களில் இருந்தும் மேலே வருவதற்கு நமக்கான ஆதரவாக யார் இருக்கிறார்கள் என்று ஒரு நாளில் நம்முடைய கடந்த காலம் மொத்தத்தையும் வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் கடைசியில் நாம்தான் நமக்காக இருந்துகொண்டு இருப்போம். மற்ற எல்லோருமே அவர்களுடைய மூளைக்கு சந்தோஷம் கிடைக்கவும் அவர்களுடைய வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிடம், உறவுகள் என்று ஆதாரங்களை உருவாக்கிக்கொள்ள மட்டும்தான் முயற்சி செய்து இருப்பார்கள். நமக்காக என்ன செய்து இருக்கிறார்கள் என்பதை எல்லாம் விட்டுவிடுங்கள். அடிப்படையில் மனித இனம் கடந்த காலத்தில் இருந்து என்ன கற்றுக்கொண்டதோ அதன்படி நடந்தால்தான் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும். எனக்கு என்னுடைய் கடந்த காலத்தை நினைத்து பார்க்க அவமானமாக உள்ளது மற்றவர்களை போல கடந்த காலம் எனக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கும் ஒரு நபராக நீங்கள் இருந்தால் உங்களுடைய கடந்த காலத்தை மாற்ற எதுவுமே பண்ண முடியாது. நிறைவேறும் ஆசைகளை வைத்து இருங்கள். கடந்த காலத்தை மாற்றுவது என்பது நிறைவேறாத ஆசை. ஒரு நிறைவேறாத ஆசைக்கு கொண்டுபோய் உழைப்பை கொட்டுவது உடைந்துபோன அடிப்பாகம் ஓட்டையாக இருக்கும் பாத்திரத்துக்கு உள்ளே திரவத்தை ஊற்றுவதற்கு சமம். அப்போதைக்கு நிறைந்தது போன்று இருக்கும் ஆனால் முழுமையாக நிறையாது ! கடந்த காலத்தை எப்படி இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரையில் நீங்கள் பார்க்கும் , கேட்கும் , பேசும் எல்லா விஷயங்களையும் பதிவுகளை பண்ணிக்கொள்ளுங்கள். கடந்த காலம் உங்கள் பாக்கெட்டில் இருந்தால் வாழ்க்கை நிறைவானதாக காணப்படுவதை உங்களால் கண்டிப்பாக உணர முடியும் என்று நம்புகிறேன். இந்த வலைப்பூ தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்த வலைப்பூவின் கருத்து பதிவுக்கு நமது இந்திய அரசங்கம் உயர்வாக கௌரவ விருதுகளை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக வலைப்பூவின் சந்தாதாரராக மாறுங்கள் என்று நிறுவனம் சார்பாக நேசத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...