Sunday, July 14, 2024

GENERAL TALKS - நம்பிக்கையற்ற முட்டாள்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியாது.



உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள் எத்தனை மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். நூற்றுக்கு நூறு சதவிகிதம் உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு நிறைவாக இருந்தால் அதுவே போதுமானது என்று நீங்கள் நினைத்தால் அதுதான் மிகவும் தப்பானதாக மாறிவிடுகிறது. உங்களுடைய வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும் உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த நீங்கள் போராட வேண்டும். இங்கே கொஞ்சம் பேர் இருப்பார்கள். நம்பிக்கையற்ற முட்டாள் மூளைகளை தங்களிடத்தில் வைத்து இருப்பார்கள். அவர்களை பெரிய டினோசோர் காலத்து ஆட்களாக கருதும் இவர்களை எல்லாம் எதுவுமே பண்ண முடியாது. சுய நலமாக இருப்பதாக இவர்கள் பண்ணும் ஒரு சில அடாவடித்தனமான காரியங்களால் நீங்கள் இவர்களை இனம் கண்டுகொள்ளலாம். மற்றபடி மேலோட்டமான பார்வைகளால் இவர்களை இனம் காண இயலாது. இவர்களுடைய வாழ்க்கையில் இவர்களுக்கு கொஞ்சம் திறன்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் முன்னேற்றத்துக்காக இவர்களிடம் இருக்கும் துறை சார்ந்த அனுபவங்களை பயன்படுத்தி சம்பாதித்து கொள்வார்கள். ஆனால் இவர்களுக்காக நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து இருப்போம் என்றால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களுடைய வாழ்க்கை தரத்துக்கு இவர்கள்தான் காரணம். இவர்களுடைய வாழ்க்கை தரமானது பெரும்பாலான இத்தகைய ஆட்களுக்கு சொத்துக்கள் மூலமாக நன்றாகத்தான் இருக்கும். இவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்கள் அனுபவம் உள்ள மக்களாகவும் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிகளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். சுற்றி இருப்பவர்கள் தங்களை விட முட்டாளாக இருக்க வேண்டும் அப்போதுதான் தனக்கு அடங்கி வாழ சுற்றி இருப்பவர்கள் கற்றுக்கொண்டு தங்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்பதை கவனமாக புரிந்துகொண்டு இருக்கும் ஆட்களாக இவர்கள் இவர்கள் இருப்பார்கள். நம்பிக்கையற்ற முட்டாள்கள் தங்களுடைய பிறப்பு முதல் சாவு வரைக்கும் பொருளாதார வாழ்க்கையில் அதே இடத்தில் அப்படியே நின்றுகொண்டு இருப்பார்கள். ஒரு இன்ச் அளவுக்கு கூட முன்னேற மாட்டார்கள். இவர்களது வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பிரபஞ்சத்தின் சக்தியாளர் ஆசைப்படுவதால் நாம் என்னதான் முயற்சிகளை பண்ணிணாலும் நம்பிக்கையற்ற முட்டாள்தனங்களை இவரகள் செய்துகொண்டு இருப்பதையும் அதனால் இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் கஷ்டப்படுவதை யாராலும் தடுக்கவே முடியாது. இவர்களை விட்டு விலகி இருப்பதுதான் எப்போதுமே புத்திசாலித்தனமான முடிவாகும். பாம்புகளை பற்றி கவலைப்படாமல் கத்தும் தவளைகளை போல இவர்களுடைய செயல்பாடுகள் இருப்பதால் இவர்களை சார்ந்து இருந்தவர்களும் ஆபத்துகளில் மாட்டிக்கொண்டு நிறைய இழக்கிறார்கள் என்பதே வருத்தமான விஷயம்.

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....