சொல்லட்டுமா ஒன்று சொல்லட்டுமா என் கண்ணா ?
கிள்ளுதடா உன் கண்கள் ரெண்டும் வந்து ஒண்ணா ரெண்டும் ஒண்ணா
விழியின் ஓரம் ஓர் இமையோடு உருகும் நீராக
இருந்து வாழ விரும்பினேனே உனது நாளாக
ஏதேதோ என்னை செய்தாய் என்னடா என்னை செய்தாய்
மலர்களோடு மலர்கள் கூட மதங்கள் யாவும் மறந்து பேச
விரல்களோடு விரல்கள் சேர கனவுதான் தினம் காண்கிறேன்
கனவென்றாலும் நினைவென்றாலும் எனக்கு நீயே உறைவிடம்
விழிகள் பேசும் மொழிகள் போதும் உயிரும் உறைந்திடுமே
தெறிக்கும் சிரிப்பில் இதழ்கள் சிரித்திட வாழ்க்கை பிறந்திடுமே
துடிக்கும் ஆசை பிறக்கும்போது வெளிச்ச மேகம் தரிக்க தோன்றும்
சில நொடி இமை இமைக்கும்போது சிறகுடன் நான் பறக்கிறேன்
உனது வாசல் கடந்து போக உலக வேகம் குறைந்திடும்
உனது பார்வை உதிரும்போது இதயம் கரைந்திடுமே
உனது பாதையில் எனது காலடி உலகம் வழிவிடுமோ ?
No comments:
Post a Comment