நெப்பொட்டிஸம் - பெரும்பாலான நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ஒரு துறைக்கு ஒரு மனிதன் வேலை செய்யவேண்டும் என்று ஆசைபட்டால் அந்த துறையில் என்னதான் போராடினாலும் நெப்பொட்டிஸம் இருந்தால் வேலைக்கே ஆகாது. ஒரு குடும்பம் அந்த குடும்பத்தை சேர்ந்த சொந்தக்காரர்கள் மட்டுமே மொத்த துறையும் கைகளுக்குள்ளே போட்டுக்கொண்டு சம்பாதித்து காட்டுவதுதான் நெப்பொட்டிஸம் என்றால் அது மட்டுமே அல்ல. இவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். புதிதாக யாராவது முன்னேறினால் அவர்களை மிரட்டியோ அவர்களை அடித்தோ வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அப்போதுதான் குடும்பங்கள் நன்றாக இருக்கும் என்றும் இவர்களுடைய கருத்து. இது அரசியல்லில்தான் நன்றாக சாத்தியப்படுகிறது. சாதிகள் இல்லை என்று சொல்பவர்கள் கண்ணுக்கு முன்னால் நடக்கும் சாதி வாரி குற்றங்களை கண்டும் காணாமல் கேட்டும் கேட்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நெப்பொட்டிஸம் ஃபேமிலிக்கள் ஆரம்பத்தில் இந்த உயர் குடி பிறப்பையும் குடும்ப சொத்துக்களையும் வைத்து துறையில் நன்றாக முன்னேறிவிடுகிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒரு ஏணி என்றால் மேலே ஏறியதும் வேறு யாருமே அந்த ஏணியில் ஏற முயற்சித்தால் ஏணியை உலுக்குவார்கள் அல்லது துப்பாக்கியால் சுட்டுவிடுவார்கள். இதுதான் நெப்பொட்டிஸம் பிரச்சனை. குடும்பம் தன்னுடைய பண பலத்தை வைத்து அடித்து சாதாரண மனிதனாக இருந்து முன்னேற நினைக்கும் யாராக இருந்தாலும் தாக்குவார்கள். மேலும் தங்களுடைய மார்க்கெட் காலியாகிவிடும் தங்களின் வருமானங்கள் காலியாகிவிடும் என்பதில் நம்பிக்கையாக இருப்பார்கள். காரணம் என்னவென்றால் இவர்களுக்கு எல்லாம் போதுமான திறமைகள் இல்லை, மேலும் ரவுடியிஸம் மற்றும் மாஃப்பியா போன்ற மூன்றாம் கட்ட மனிதர்கள்தான் பாலிவுட்டை கண்ட்ரோல் பண்ணுகிறார்கள். பாலிவுட் ஒரு நரகம். தெலுங்கு சினிமாக்களில் குடும்பங்களில் இருக்கும் நடிகர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுப்பார்கள். தமிழ் சினிமாவில் நெப்பொட்டிஸம் அவ்வளவாக இல்லை. ஆனால் சம்பள பிரச்சனை சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை இன்னொரு போஸ்ட்டில் பார்க்கலாம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக