வெள்ளி, 26 ஜூலை, 2024

CINEMA TALKS - ELEMENTAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !





இந்த படம் மற்ற படங்களை போல கதையே இல்லாமல் வெளிவரும் கலாச்சாரத்தில் இருந்து விலகி சிறப்பான கதைக்களம் கொண்டு வெளிவந்து இருப்பதால் இந்த படம் அனைத்து வகையான விமர்சனங்களிடம் தப்பி விடுகிறது. பிக்ஸார் நிறுவனத்திடம் இருந்து நிறைய நாட்கள் எதிர்பார்த்ததற்கு ஒரு தரமான படைப்பு தான் இந்த படம். தண்ணீரில் சக்தியால் உயிர் வாழும் குடும்பத்தை சேர்ந்த ஒரு காதலன் நெருப்பின் சக்தியால் உயிர்வாழும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். இதுவரையில் வரலாற்றில் யாருமே இப்படி குடும்பம் மாற்றி காதலித்தது இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுடைய காதல் வளர்ச்சி அடைகிறது. காதலனின் வீட்டில் காதலுக்கு போதுமான ஆதரவு இருந்தாலும் காதலியின் வீட்டில் அவளுடைய தந்தை சொல்லை கண்டிப்பாக அவள் மீற மாட்டாள் என்பதால் எப்படி தந்தையை சமாதானப்படுத்தி தன்னுடைய காதலனை கரம் பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் கற்பனை திறனும் அனிமேஷன் காட்சிகளும் கண்டிப்பாக வேற லெவலில் உள்ளது. தமிழ்மொழி டப்பிங் பார்க்கவில்லை என்றாலும் இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் இன் ரசனைக்கு ஏற்றவாறு இந்த படத்தை எடுத்துள்ளார்கள். மேலும் கதைக்களம் ஒருவரியாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பி விடவில்லை . கிளைமாக்ஸ் காட்சிகள் நீங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் படத்தின் கதைக்களத்தோடு கச்சிதமாக பொருந்துகிறது. புதிய வண்ணமயமான டிசைன் ஸ்டைல் பாணியால் நகரும் கதாப்பத்திரங்களின் தன்மைகளைக் கொண்ட விசுவல் காட்சிகள் நிறைந்திருக்கும் இத்தகைய அனிமேஷன் ஸ்டைல் மிகவும் நுட்பமானது என்பதாலும் அடிக்கடி இது போன்ற 90 களின் ஹாலிவுட் ரொமான்டிக் காமெடி படங்களை நினைவுபடுத்தும் அனிமேஷன் படங்களை பார்க்க முடியாது என்பதாலும் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த படம் மேலும் நீங்கள் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...