Wednesday, July 17, 2024

CINEMA TALKS - GARUDAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




பொதுவாக நகைச்சுவை நடிகராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து இப்போது கதாநாயகராக வளர்ந்து இருப்பவர்தான் சூரி. இவருக்கு குறிப்பாக இவருடைய கேரக்ட்டருக்கு இந்த படம் வேற லெவல்லில் பொருந்துகிறது. கௌரவமான குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் பெற்றோரை இழந்து இப்போது உள்ளூர் பகுதிகளில் தொழில் நிறுவனம் நடத்தும் இரண்டு நண்பர்களின் உடன் பிறவாத சகோதரராக சின்ன வயதில் இருந்து வளர்க்கப்படும் சொக்கன் என்ற கதாப்பத்திரத்தின் வாழ்க்கை எப்படி ஒரு சுயநலமிக்க அமைச்சரும் அவருடைய ஆட்களும் பணத்துக்காக பண்ணும் கொலைகார சதிவேலைகளால் பாதிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. கதைக்களம் விரிவாகவும் நடப்பு காலத்தில் சொல்லப்படும் கதையாகவும் இருப்பதாலும் லொகேஷன் மற்றும் காமிராக்கள் என்பதையெல்லாம் கடந்து சசி குமார் , முகுந்தன் , சூரி , சமுத்திரக்கனி மற்றும் அனைத்து நடிகர்களின் வசனங்களும் காட்சிகளும் நல்ல நடிப்பு திறன் நிறைந்து காணப்படுவதால் ஒரு தரமான படம் பார்த்த அனுபவம் இருக்கிறது. எமோஷன்கள் காட்சிகளில் நிறைந்து இருந்தாலும் கமேர்ஷியல் படங்களில் இடம்பெறும் அனைத்து விஷயங்களும் சரியான அளவு கலந்து சுறுசுறுப்பாக திரைக்கதை நகர்வதால் இந்த படம் தியேட்டர்ரில் பார்க்கவேண்டிய தரமான எதார்த்த வாழ்வியல் கதை , அதே சமயத்தில் பக்காவான கமேர்ஷியல் சூப்பர் ஹிட் கதை என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விஷயங்களுமே இந்த படத்துக்கு பொருந்துகிறது. இதுதான் இந்த படத்துக்கான நமது வலைப்பூவின் விமர்சனம் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பதன் மூலம் சந்தாதாரராக மாறிவிடுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....