Sunday, July 28, 2024

GENERAL TALKS - பிரச்சனைகளை சரிசெய்யும்போது தவறுகள் நடைபெறுவது சகஜம் !


ஒரு மனிதன் அவனுடைய தனிப்பட்ட மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதால் நிச்சயமாக யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு சாதனையை அடைய முடியும். இருந்தாலும் இப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்ன சாதாரண விஷயமா ? இதனால்தான் நம்முடைய தனிப்பட்ட மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதால் மற்றவர்களுடைய தனிப்பட்ட மனநிலையிலும் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பதையும் மற்றவர்களை எப்படி வேலை வாங்குவது என்பதையும் சேர்த்து வைத்து நாம் கற்றுக் கொள்கிறோம் ! இது நிச்சயமாக நன்மை பயக்கும் விஷயம்தானே. இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட மனதில் மாற்றங்களை கொண்டு வந்து ஒருவேளை நாம் எதிர்பார்ப்பது போல எல்லாவற்றையும் அடைந்து விட்டாலும் நம்முடைய தனிப்பட்ட மனநிலை எப்போதும் அதனுடைய பழைய தோல்விகரமான நிலைக்கு மாறத்தான் பார்க்கும். இத்தகைய மனநிலை மாற்றங்களால் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானது மேலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.   இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய தனிப்பட்ட மன நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதே ஒரு மிகப்பெரிய கடினமான காரியம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் அப்படி கொண்டு வந்தாலும் அத்தகைய மாற்றங்களை வாழ்க்கையில் நிலைக்க வைப்பது என்பத்து கடினத்திலும் கடினமான விஷயம். இருந்தாலும் இந்த உயிரும் இந்த வாழ்க்கையும் ஒரே ஒருமுறை தானே கிடைக்கும். மிஞ்சிப் போனாலும் 80 ஆண்டுகள் வாழக்கூடிய இந்த வாழ்க்கையில் இந்த விஷயத்தை நடைமுறைப்படுத்தி பார்ப்பதில் தவறு என்ன இருக்கிறது ? ஒரு பிரச்சனை நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் அதனை சரி செய்யக்கூடிய முயற்சிகள் எடுக்கும்போது சின்ன தவறுகள் முதல் பெரிய தவறுகள் வரைக்கும் அனைத்து வகை தவறுகளும் நடைபெறுவது சகஜம். இருந்தாலும் நாம் பிரச்சனைகளை சரி செய்ய எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கை கொஞ்சம் தவறாகத்தான் முடியும் என்றாலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது இன்னும் மோசமான விஷயம் தானே ? பெரும்பாலான நேரங்களில் மனிதன் தன்னுடைய கெபாசிட்டி என்னவென்பதையே கொஞ்ச நேரத்துக்கு மறந்து விடுகிறான் . இந்த உலகத்தில் ஆரோக்கியமாக ஒவ்வொரு வருடத்தை கடப்பதும் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகும். ஒரு நாளில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய மனிதன் மேற்கொண்டு ஒரு வருடம் தன்னுடைய உயிரை அதிகம் முயற்சி எடுத்து ஒரு வழியாக 365 நாட்கள் உயிரை உள்ளங்கையில் பிடித்து காப்பாற்றிக் கொண்டு அடுத்த வருடத்தை தொடுவதால் தான் இந்த பிறந்தநாள் விழா கொண்டாடும் கலாச்சாரமே நம்முடைய மனித வாழ்க்கையில் இருக்கிறது. இதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லப்படுவது என்னவென்றால் நம்மால் முடிந்த செயல்களை எப்போதுமே துணிந்து செய்ய வேண்டும்,  பின் நாட்களில் தவறாக போகும் என்றாலும் செயல்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது அதனை விடவும் தவறான விஷயமாகும். இதுதான் இன்றைய நாளில் பதிவு. இந்த வலைப்பூவை அதிகமான வியூக்களை கொடுத்து பேராதரவுடன் வெற்றி அடைய செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....